திட்டமிட்டு நிராகரிக்கப்படுகிறது எமது மொழி.

இலங்கையில் தமிழ் மொழியின் இடத்தை சீன மொழி பிடித்துள்ளமையினால் பெரும் சர்ச்சை நிலை ஏற்பட்டுள்ளது.


பொதுவாக இலங்கையிலுள்ள பெயர் பலகைகள் சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய  மொழிகளில் காணப்படும். கொழும்பு நகரில் முன்னெடுக்கப்படுகின்ற குப்பை முகாமைத்துவ திட்டத்தின் பெயர் பலகையில் தமிழ் மொழியில் எழுதப்படவில்லை. தமிழ் மொழியில் எழுதப்பட வேண்டிய இடத்தில் சீன மொழி இணைக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய குறித்த பெயர் பலகை முதலில் சிங்கள மொழியிலும் இரண்டாவதாக சீன மொழியிலும் மூன்றாவதாக ஆங்கில மொழியிலும் எழுதப்பட்டுள்ளது.

குறித்த திட்டம் மேல் மாகாண மற்றும் மாநாகர அபிவிருத்தி அமைச்சினால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

திட்டமிட்டு தமிழ் மொழி நிராகரிக்கப்பட்டுள்ளமையானது தமிழ் மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது
Powered by Blogger.