பொது இடங்களில் கோயில்: நீதிபதி கண்டனம்!

மத உணர்வைப் பயன்படுத்தி மக்களிடமிருந்து பணம் பறிக்கும் நோக்கத்தில் பொது இடங்களை ஆக்கிரமித்துக் கோயில் கட்டுவதாகச் சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.


கோயம்புத்தூரில் உள்ள கோட்டாட்சியர் அலுவலகத்தில் கட்டப்பட்ட விநாயகர் கோயிலை அகற்றக் கோரி, தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் ராமகிருஷ்ணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது.

இன்று (ஜனவரி 4) மீண்டும் இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது. “மக்கள் மத உணர்வைப் பயன்படுத்தி பணம் பறிக்கும் நோக்கத்தில் பொதுஇடங்களை ஆக்கிரமித்துக் கோயில் கட்டுகின்றனர். நடைபாதை மற்றும் பொது இடங்களில் அனுமதியின்றி, சட்டத்திற்குப் புறம்பாகக் கோயில்கள் கட்டப்பட்டுள்ளன.

தெய்வங்களாக இருந்தாலும் கூட ஆக்கிரமிப்பு செய்ய உரிமை இல்லை” என்று கண்டனம் தெரிவித்தார் நீதிபதி.

இந்து அறநிலையத் துறை, உள் துறைச் செயலாளர், உள்ளாட்சித் துறைச் செயலாளர் ஆகியோரை நீதிமன்றமே தானாக முன்வந்து இந்த வழக்கில் சேர்த்தது.

“சட்டவிரோதமாகச் சாலைகளை ஆக்கிரமித்து எவ்வளவு கோயில்கள் கட்டப்பட்டுள்ளன. எவ்வளவு கோயில்கள் அகற்றப்பட்டுள்ளன என்பது குறித்தான முழு விவர அறிக்கையை வரும் 21ஆம் தேதி தாக்கல் செய்ய வேண்டும்” என்று நீதிபதி உத்தரவிட்டார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News  #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines  #Latest Tamil News #India News  #World News #Tamil Film #Jaffna #Srilanka #colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.