மாணவிகளுக்கு தொல்லை கொடுத்ததாக பாடசாலை அதிபர் கைது!
மாணவிகளுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தார் என்ற குற்றச்சாட்டில் பாடசாலை அதிபர் ஒருவர் வவுனியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
வவுனியா பாடசாலை ஒன்றின் அதிபரே நேற்று (4) மாலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
வவுனியா நகரிற்கு அண்மையில் அமைந்துள்ள பாடசாலையொன்றின் அதிபர், தரம் 11இல் கல்வி கற்கும் பாடசாலை மாணவர்களுக்கு கடந்த சில மாதங்கள் பிரேத்தியேக வகுப்புக்கள் நடாத்தி வந்துள்ளார். இந்த வகுப்புகளுக்கு பெரும்பாலும் மாணவிகளையே அவர் அழைத்துள்ளார். மாணவிகளை கண்களை மூடி தேவாரம் பாடிக் காட்டவேண்டும் என்றும் கூறி அந்த நேரத்தில் மாணவிகளிடம் அங்க சேஷ்டைகள் புரிந்துள்ளார்.
இந்த விடயத்தை மாணவிகள் பெற்றோரிடம் கூறியதையடுத்து வலயக்கல்வி அலுவலகம் மற்றும் வவுனியா பொலிஸ் நிலையத்தில் பாதிக்கப்பட்ட மாணவ சமூகம் சார்பாக பெற்றோர்கள் முறைப்பாடுகளை வழக்கினர்.
பாடசாலையினுடைய 53 வயதுடைய அதிபரை பொலிஸார் நேற்று மாலை கைது செய்து பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
மேலதிக விசாரணைகளின் பின்னர் அதிபரை வவுனியா நீதிவான் முன்னிலையில் இன்று முற்படுத்தப்படுவார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, இந்தப் பிரச்சினையை வெளிக்கொணர்வதற்கு பெற்றோருடன் இணைந்து செயற்பட்டார் என்று தெரிவித்து ஆசிரியை ஒருவரை வேறொரு பாடசாலைக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. சந்தேகநபர் மீது முன்பும் இவ்வாறான ஒரு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Srilanka #colombo

கருத்துகள் இல்லை