யாழில் ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் கைது


யாழ். அரியாலை பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். அத்தோடு கைது செய்யப்பட்ட குறித்த சந்தேகநபரிடமிருந்து, 5 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.

 இந்த சம்பவம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை இடம்பெற்றுள்ளது. அரியாலை பூம்புகார் பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய குறித்த இளைஞரை சோதனையிட்டபோதே, அவரது உடமையிலிருந்து ஹெரோயின் போதைப்பொருளை மீட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


 கைது செய்யப்பட்ட சந்தேகநபர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில், மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

No comments

Powered by Blogger.