ஜனாதிபதி தோ்தலை முற்கூட்டியே நடாத்துவதற்கு மைத்திரி தீா்மானம்.ஜனாதிபதி தேர்தலை முன்கூட்டியே நடத்துவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.


இந்நிலையில், ஜனாதிபதி தேர்தலை முன்கூட்டியே நடத்துவதற்கான அறிவிப்பை வெளியிடுவதற்கு ஜனாதிபதி தயார்ப்படுத்தல்களை மேற்கொண்டுள்ளதாகவும்  இந்த விடயம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்துரையாடல்களை நடத்தியுள்ளதாகவும்  அரசியல் தரப்புகள் தகவல்கள் வெளியிட்டுள்ளதாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அரசியலமைப்புக்கு அமைய, ஜனாதிபதி தேர்தலை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் 9ஆம் திகதிக்கு பின்னர் எந்த நேரத்திலும் அறிவிக்க முடியும்.

இந்நிலையிலேயே, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் மாற்றம் மற்றும் மாகாணங்களுக்கு தனது ஆதரவாளர்களை ஜனாதிபதி ஆளுனர்களாக நியமித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஆதரவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு கிடைக்கும் வாய்ப்பு உள்ளதாக கொழும்பு அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.

No comments

Powered by Blogger.