மிக நீளமான சுரங்க ரயில் பாதை வெள்ளோட்ட நிகழ்வு

புதிதாக நிர்மாணிக்கப்பட்ட இலங்கையில் மிக நீளமான சுரங்க ரயில் பாதையான மாத்தறை – பெலியத்த ரயில் பாதையின் வெள்ளோட்ட நிகழ்வினை இடைநிறுத்தி மஹிந்த ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


போக்குவரத்து அமைச்சர் அர்ஜூன ரணதுங்கவின் தலைமையில் இந்த நிகழ்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஆரம்பமானது.

குறித்த ரயில் வெள்ளோட்டத்திற்காக அமைச்சர் அர்ஜூன ரணதுங்க ரயிலில் ஏறி அமர்ந்து ஆரம்பித்துவைக்க முற்பட்ட போதே இந்த போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.

இதன் போது ரயிலில் மஹிந்த ராஜபக்ஷவின் பாதாதையும் கட்டி போராட்டக்காரர்கள் தமது போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
Powered by Blogger.