கிழக்கு மாகாண ஆசிரியர் பிரச்சினைக்கு தீர்வு

கிழக்கு மாகாணத்தில் ஆசிரியர் குறைபாடுகள் வெகு விரைவில் நிவர்த்தி செய்யப்படுமென ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாண ஆளுநராக பதவிப் பிரமானம் செய்து கொண்ட கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார்.


திருகோணமலையில் உள்ள ஆளுநர் அலுவலகத்தில் இன்று (திங்கட்கிழமை) அவர் தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.

அதனைத்தொடர்ந்து ஆளுநர் செயலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் கலந்துகொண்டார்.

இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா மேற்குறிப்பிட்டவாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் கருத்துத் தெரிவித்த அவர், தாம் நாடாளுமன்ற உருப்பினர் பதவியினை இராஜினாமா செய்துவிட்டு ஆளுநர் பதவியினை ஜனாதியிடமிருந்து பொறுப்பேற்றுக்கொண்டதாக தெரிவித்தார்.

கிழக்கு மாகாணத்தின் ஆளுநர் என்ற அடிப்படையில் சிறப்பான தீர்மானங்களை நிறைவேற்றி அதனூடாக மாகாணத்தினை கட்டியெழுப்புவதற்கான நடவடிக்கைகளை தாம் முன்னெடுக்கவிருப்பதாகவும் தெரிவித்தார்

குறிப்பாக 13வது சட்ட திருத்தத்தினை முழுமையாக அமுழ்ப்படுத்தி அதனூடாக மாகாண நிர்வாக கட்டமைப்புகளை சிறப்பான முறையில் முன்கொண்டு செல்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் தாம் முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்

மேலும் ஆசிரியர் குறைபாடுகள், தொண்டர் ஆசிரியர் சம்பந்தமான பிரச்சினைகள், சிற்றூளியர்களது குறைபாடுகள், சுகாதாரம், கல்வி, வீதி போன்ற மாகாணத்திலுள்ள குறைபாடுகளை வெகு விரைவில் நிவர்த்தி செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் தாம் எடுக்கவிருப்பதாக தெரிவித்தார்.

குறித்த நிகழ்வில் பிரதம செயலாலர் சரத் அபயகுணவர்தன, முதலமைச்சரவை செயலாலர் யூ.எல்.ஏ.அஸீஸ், ஆளுநரது செயலாலர் அசங்க அபேவர்தன, மாவட்ட அரசாங்க அதிபர் என்.ஏ.ஏ.புஸ்பகுமார, பிரதிப் பிரதம செயலாளர்கள் மற்றும், திணைக்களங்களது செயலாளர்கள் அரச அதிகாரிகள் பங்கேற்றிருந்தனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News  #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines  #Latest Tamil News #India News  #World News #Tamil Film #Jaffna #Srilanka #colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.