புதிய அரசமைப்பு நிறைவேற- ஓரணியில் நிற்க வேண்டும்!! சம்பந்தன் சூளுரை

நாட்­டில் மீண்­டும் ஓர் குரு­திக்­க­ளரி ஏற்­ப­டா­மல் இருக்க வேண்­டு­மெ­னில் புதிய அர­ச­மைப்பு உரு­வாக வேண்­டும்.
இன­வா­தத்­தைக் கக்­கா­மல் – பிரி­வி­னையை ஏற்­ப­டுத்­தா­மல் மைத்­திரி, ரணில், மகிந்த தரப்­பு­க­ளைச் சேர்ந்­தோர் ஓர­ணி­யில் நின்று புதிய அர­ச­மைப்பு வெற்­றி­பெற உழைக்க வேண்­டும். இவ்­வாறு கோரிக்கை விடுத்­துள்­ளார் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வர் இரா.சம்­பந்­தன்.

புதிய அர­ச­மைப்பு நிறை­வே­றாது என்று மகிந்த அணி, சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்சி மற்­றும் மக்­கள் விடு­தலை முன்­னணி என்­பன தெரி­வித்து வரும் நிலை­யில், கூட்­ட­மைப்பு எப்­ப­டி­யான நட­வ­டிக்­கை­களை எடுக்­கப் போகின்­றது என்­பது தொடர்­பில் கேட்­ட­போதே மேற்­கண்­ட­வாறு கூறி­னார்.
அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:

நாட்­டைப் பிரிப்­பதோ – துண்­டாக்­கு­வதோ எமது நோக்­க­மல்ல. நீதி மற்­றும் சமத்­து­வம் என்­ப­வற்­றின் அடிப்­ப­டை­யில் பிரிக்க முடி­யாத – பிள­வு­ப­டாத ஒரு­மித்த நாட்­டுக்­குள் தேசிய பிரச்­சி­னைக்­கான நிரந்­த­ரத் தீர்வை நாம் அடைந்­திட வேண்­டும். இதுவே எமது நிலைப்­பாடு. இதில் நாம் உறு­தி­யாக உள்­ளோம்.

குறு­கிய அர­சி­யல் எண்­ணம் கொண்ட இன­வா­தி­கள் – பிரி­வி­னை­வா­தி­கள் புதிய அர­ச­மைப்பு விவ­கா­ரத்தை தங்­கள் சுய­நல அர­சி­ய­லுக்­குப் பயன்­ப­டுத்த முயல்­கின்­ற­னர். தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பி­னரை அவர்­கள் கண்­ட­படி வசை­பா­டு­கின்­ற­னர்.

இதைப் பார்த்து நாம் சோர்ந்­து­போக மாட்­டோம்; பின்­வாங்க மாட்­டோம். எமது பணி தொட­ரும். எந்­தத் தடை­கள் வந்­தா­லும் அத­னைத் தகர்த்­தெ­றிந்து முழு மூச்­சு­டன் நாம் பய­ணிப்­போம். எமது இலக்கை அடைந்தே தீரு­வோம். புதிய அர­ச­மைப்­பைக் குழப்­பும் முயற்­சி­களை நாம் ஓர­ணி­யில் நின்று தோற்­க­டிக்க வேண்­டும். இதற்கு மைத்­திரி, ரணில், மகிந்த ஆகிய தரப்­பி­னர் ஒத்­து­ழைப்­புக்­களை வழங்­க­வேண்­டும்.

புதிய அர­ச­மைப்பு விவ­கா­ரத்­தில் நான் பெரிது, நீ பெரிது என்று இல்­லா­மல் நாடு­தான் முக்­கி­யம் என்ற வகை­யில் நாம் செயற்­பட வேண்­டும். கட்­சி­க­ளுக்­கி­டை­யி­லான முரண்­பா­டு­களை புதிய அர­ச­மைப்பு விவ­கா­ரத்­து­டன் எவ­ரும் தொடர்­ப­டுத்­தக்­கூ­டாது. இது நாட்­டின் நலன் சார்ந்த விட­யம் என்­பதை அனை­வ­ரும் நினை­வில்­கொள்ள வேண்­டும் – என்­றார்.

No comments

Powered by Blogger.