அரசாங்கம் அனைவருக்கும் சமமான அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்கும்

அரசாங்கமாகும் என்று நிதி மற்றும் ஊடக அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். மாத்தறை நூபே
பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் அமைச்சர் உரையாற்றினார். வீதி விபத்துக்களினால் தாய் அல்லது தந்தையை இழந்த குடும்பங்களின் பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில் வழங்குவதற்காக இந்த நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. வீதிப் பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை ஒழுங்கு செய்துள்ள இந்த நிகழ்ச்சித் திட்டம் நேற்று முதல் நாடு பூராகவும் அமுல்படுத்தப்பட்டுள்ளது. நேற்றைய தினம் 14 சிறுவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கப்பட்டன.

No comments

Powered by Blogger.