பாடுநிலாவே பாகம் 15

அன்றைய பொழுதை மகிழ்வாக்கிவிட்டு மறுநாளே தமிழ்நாடு நோக்கி பயணிக்க ஆயத்தமாகினர். அகல்நிலாவின் உதவியோடு தன்னைத் தயாராக்கிக்கொண்ட சாதனா,
வெளியே வந்தாள். நிலவு மங்கை கண்ணிழந்தது போல இருந்தது அவளது தோற்றம். காங்கேசனின் குரல் அருகில் கேட்காததால்
“அகல், உன் அண்ணா எங்கே? ஆளையே காணோம்,? என்றாள்.

அவள் காங்கேசனைத்தான் தேடுகிறாள் என்பதைப் புரிந்துகொண்டபோதும் விளையாட எண்ணிய அகல்நிலா,
“இசை அண்ணாவா, அவர் அக்கா வீட்டுக்கு” என்றாள்.
“ஏய்---- காங்கேசன் --- “ என்றாள் சாதனா.
“சாதனா அண்ணி, அண்ணனைப்பாக்கணும்னு சொன்னா நான் சொல்லிடப்போறன், அதவிட்டிட்டு ------“ -இழுத்தாள் அகல்நிலா.
“ஏய் ---அவன் காதில விழுந்திடப்போகுது” என்றாள் பதற்றமாய்.

“அண்ணா ---அண்ணி கூப்பிடுறாங்க,” சத்தமாய்ச் சொன்னாள் அகல்நிலா.
மனமெல்லாம் மத்தாப்பூ மழை பொழிய அவசரமாய் வந்தவன், அந்த வார்த்தை தந்த குதூகலத்தை முகத்திலும் காட்டியடி, அகல்நிலாவின் அருகில் வந்து அவளது கூந்தலை மெல்ல வருடினான்.
“என்ன?” சைகையில் கேட்டவளிடம்,
“ரொ---ம் –ப சந்தோசம்” எனச்சைகையிலேயே பதில் சொல்லிவிட்டு சாதனாவிடம் ஏதும் தெரியாதவன் போல

“என்ன சாது?” என்றான்.
“டேய் , அகலிடம் என்ன சொன்னாய்?” என்றாள்.
“அது—“ அவன் இழுக்க ----
“எனக்கு கண் தெரியாது, எதையும் பாக்கமாட்டன் எண்டுதானே இப்பிடிச் செய்யிறாய்?” என்றாள்.
“ஐயோ---சாது”
“ஏண்டா, இப்பிடி பதறிப்போறாய், பகிடியாதான் கேட்டனனான்,சொல்லு, என்ன சொன்னனி ” என்றாள்.
“உண்மையைச் சொல்லவா, பொய் சொல்லவா?” என்றாள்.

“உண்மையே சொல்லு,” என்றாள்.
“அகல் அப்பிடி கூப்பிட்டதும் சந்தோசமா இருந்திச்சு, அதுதான்” என்றான்.
நாணத்தோடு புன்னகைத்தாள் சாதனா.
அவளது சிவந்த முகத்தை ரசித்தபடியே ‘கல்லும் மெல்ல கரையத்தொடங்கிவிட்டது’ என எண்ணினான் காங்கேசன்.
அவ்வேளை அங்கே வந்த காங்கேசனின் தாயார், “என்னப்பா புறப்படலாமா?” என்றார்.

தொடரும்...!


#Tamilarul.net #Tamil #News #Tamil News  #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines  #Latest Tamil News #India News  #World News #Tamil Film #Jaffna #Srilanka #colomboPowered by Blogger.