சீனாவிலுள்ள இஸ்லாமியர்களுக்கு அமுலாகும் புதிய சட்டம்!

சீனாவில் வசித்துவரும் முஸ்லிம்களை சீன கலாச்சாரத்திற்கு மாற்றும் வகையிலான புதிய சட்டம் ஒன்று அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


சீனாவின் அதிகாரப்பூர்வ ‘குளோபல் டைம்ஸ்’ நாளிதழ் இதுதொடர்பிலான தகவலை வெளியிட்டுள்ளது.

சீனாவின் மேற்கு பிராந்தியத்திலுள்ள ஜின் ஜியாங் மாகாணத்தில் உய்குர் இன முஸ்லிம் மக்கள் அதிகளவில் வசித்து வருகின்றனர். இவர்கள் அண்மைக்காலமாக சில முக்கிய உரிமைகளை வழங்குமாறு கோரி போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையடுத்து 10 இலட்சத்துக்கும் மேற்பட்ட உய்குர் முஸ்லிகள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக ஐ.நா அறிவித்திருந்தது. எனினும் இதை சீன அரசாங்கம் இதனை மறுத்திருந்தது.

இதற்கிடையில், சீனாவில் சில பகுதிகளில் முஸ்லிம் மத பழக்க வழக்கங்களைப் பின்பற்றுவது சட்டவிரோதமாக கருதப்படுகிறது. உண்ணா நோன்பு இருப்பது, தொழுகை நடத்துவது, நீளமாக தாடி வளர்ப்பது, முகத்தை மறைத்து செல்லும் ‘ஹிஜாப்’ அணிவது இவை அனைத்தும் சீனாவின் சில பகுதிகளில் தடை செய்யப்பட்டுள்ளது. அதனை மீறுபவர்கள் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்படுகின்றனர்.

இந்நிலையில், சீனாவில் வாழும் முஸ்லிம்களை, சீன பழக்க வழக்கங்களுக்கும் கலாச்சாரத்துக்கும் மாற்றும் வகையில் புதிய சட்டம் ஒன்றை அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.

சீன மயமாக்கல் என்பது, சீனாவில் வாழும் சீனர்கள் அல்லாத மற்ற சமூக மக்களை சீன கலாச்சாரத்துக்கு படிப்படியாக மாற்றுவதாகும். இதற்கமைய சீனர்களின் உணவு பழக்க வழக்கம், எழுதுவது, தொழில், கல்வி, மொழி, சட்டம், வாழ்க்கை முறை, அரசியல், சித்தாந்தம், மதம், அறிவியல் தொழில்நுட்பம், கலாச்சாரம் என அனைத்து விஷயங்களையும் மற்ற சமூகத்து மக்களும் பின்பற்ற செய்வது.

இதற்கான புது சட்டத்தைத்தான் சீன அரசாங்கம் அறிவித்துள்ளது. அடுத்த 5 ஆண்டுகளுக்குள் சீனாவில் வாழும் முஸ்லிம்களை படிப்படியாக சீன மயமாக்கலுக்கு மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால், இந்த சட்டத்தை எப்படி அமல்படுத்தப் போகிறார்கள் என்பது தொடர்பிலான விபரங்கள் இதுவரையில் வெளியிடப்படவில்லை.
#Tamilarul.net #Tamil #News #Tamil News  #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines  #Latest Tamil News #India News  #World News #Tamil Film #Jaffna #Srilanka #colombo

No comments

Powered by Blogger.