சந்திரிக்காவை சுதந்திரக் கட்சியிலிருந்து ஓரம்கட்ட நடவடிக்கை

சிறிலங்காவின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரனதுங்கவை சுதந்திரக்கட்சியிலிருந்து முற்றாக அகற்றுவதற்கான முயற்சிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகதகவலக்ள் வெளியாகியுள்ளன.


தாமரை மொட்டுக் கட்சியென அழைக்கப்படும் மஹிந்த ராஜபக்சவின் சிறிலங்காபொதுஜன பெரமுனவுடன் சிறிலங்கா சுதந்திரக் கட்சியை இணைத்து தேர்தலுக்கான புதியகூட்டணியொன்றை அமைக்க சுதந்திரக் கட்சியின் தலைவரான ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனஎடுத்துள்ள தீர்மானத்திற்கு அவரது கட்சிக்குள் கடும் எதிர்ப்புக்கள் எழுந்திருக்கின்றன.

இதற்கு முன்னாள் ஜனாதிபதியும், சுதந்திரக் கட்சியின் போசகருமான சந்திரிக்காவே காரணம்என்றும், அவரது விசுவாசிகளே மைத்ரிக்கு எதிராக போர்கொடிகளைஉயர்த்தியிருப்பதாகவும் உறுதியாகியுள்ளது.

இந்த நிலையில் அண்மையில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின்தலைமையகத்தையும் சந்திரிக்காவின் விசுவாசிகள் பலவந்தமாக கைப்பற்ற முயற்சித்திருந்ததாகவும், இதனையடுத்தே மைத்ரி அவசரமகா தலைமையகத்திற்கு பூட்டுபோட்டதுடன், பொலிஸ் பாதுகாப்பையும் வழங்கியிருந்ததாகவும் தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியை பாதுகாக்கும் அமைப்பினர்என்று தம்மை அடையாளப்படுத்திக்கொண்ட சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள் சிலர்கூட்டுச் சேர்ந்து, மஹிந்தவுடனான கூட்டை முறித்துக்கொள்ளுமாறு மைத்ரிக்க நிபந்தனைவிதித்ததுடன், காலக்கெடுவையும் விதித்துள்ளனர்.

இந்த நிலையிலேயே சுதந்திரக் கட்சியின் ஸ்தாபகரான எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்கமற்றும் இரும்பு மனிதி என அழைக்கப்படும் முன்னாள் தலைவர் சிறிமாவோ பண்டாரநாயக்கவின்புதல்வியும், ஒரு தசாப்தகாலங்களுக்கு மேலாக சுதந்திரக் கட்சியின் தலைவராக இருந்தசந்திரிக்கா குமாரனதுங்கவை கட்சியின் அடிப்படை உறுப்புரிமையை பறிப்பதற்குநடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டிருக்கின்றன.

இதற்கு சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தற்போதைய தலைவரான ஜனாதிபதிமைத்ரிபால சிறிசேனவே உத்தரவிட்டிருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

இந்தத் தகவலை சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் துணைச் செயலாளரான முல்மாகாண முதலமைச்சர் இசுறு தேவப்பிரிய உறுதிப்படுத்தியுள்ளார்.

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் போசகரான சந்திரிக்கா குமாரனதுங்க மேலும்சிலருடன் கூட்டணியொன்றை அமைத்து ஐக்கிய தேசியக் கட்சியின் தேவைகளுக்கு ஏற்ப செயறடபட்டுவருவதுடன், சுதந்திரக் கட்சியை பிளவுபடுத்தவும் சதித்திட்டங்களை அரங்கேற்றியுள்ளதாலேயேஅவருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கத் தீர்மானித்துள்ளதாகவும் இசுறுதேவப்பிரிய தெரிவித்துள்ளார்.

சந்திரிக்கா குமாரனதுங்கவின் சுதந்திரக் கட்சியை பிளவுபடுத்தும் முயற்சிக்குஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தின் அமைச்சர் ராஜித்த சேனாரத்னவும் முக்கிய பங்காற்றிவருவதாகவும்இசுறு தேவப்பிரிய குற்றம்சாட்டியுள்ளார்.

எவ்வாறாயினும் சுதந்திரக் கட்சியின் தலைவரான சிறிலங்காவின் தற்போதையஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை மஹிந்த ராஜபக்சவின் கடந்த அரசாங்கத்தில் இருந்து வெளியேற்றி, அவரை ஜனாதிபதி வேட்பாளராக ஐக்கிய தேசியக் கட்சியை ஏற்றுக்கொள்ள வைத்து மஹிந்தவிற்குஎதிராக வேட்பாளராக நிறுத்தி ஜனாதிபதியாக வெற்றிபெற வைத்த பெருமை சந்திரிக்காகுமாரனதுங்க மற்றும் ராஜித்த சேனராத்னவே முக்கிய பங்கு ஆற்றியிருந்தனர்.

எனினும் மீண்டும் மஹிந்த ராஜபக்சவுடன் கூட்டணியொன்றை ஏற்படுத்திக்கொண்டுள்ளமைத்ரிபால சிறிசேன தற்போது அவரையே ஜனாதிபதி பதவிக்கு அமர்த்திய ஐக்கிய தேசியக்கட்சியை முதலில் தூக்கி எறிந்த நிலையில் தற்போது சந்திரிக்காவையும் அரசியலில்இருந்து முழமையாக ஓரம்கட்ட தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News  #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines  #Latest Tamil News #India News  #World News #Tamil Film #Jaffna #Srilanka #colombo
Powered by Blogger.