பிரான்ஸ் கடற்படை தளபதி இந்தியாவிற்கு விஜயம்

பிரான்ஸ் கடற்படைத் தளபதி அட்மிரல் கிரிஸ்டோப் பிராஸிக் இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ளார்.அவருக்கு புதுடில்லியில் இன்று (திங்கட்கிழமை) இராணுவ மரியாதையுடன் வரவேற்பளிக்கப்பட்டது.


நான்கு நாட்கள் விஜயமாக இந்தியாவிற்கு வருகைதந்துள்ள பிரான்ஸ் கடற்படை தளபதியை இந்திய கடற்படைத் தளபதி சுனில் லம்பா வரவேற்றார். இதனையடுத்து அவருக்கு புதுடில்லியில் இந்தியக் கடற்படையினரால் அணிவகுப்பு மரியாதையும் வழங்கப்பட்டது.

இந்த விஜயத்தின்போது, இரண்டு நாட்டுக் கடற்படைகளுக்கு இடையிலான உறவை பலப்படுத்துவது தொடர்பில் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளது.

மேலும், இந்தியாவின் பாதுகாப்புப் பிரதானிகளுடனும் விசேட கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா மற்றும் பிரான்ஸ் கடற்படையினர் இணைந்து வருடா வருடம் ‘வருணா’ எனும் கடற்படை பயிற்சி முகாமில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News  #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines  #Latest Tamil News #India News  #World News #Tamil Film #Jaffna #Srilanka #colomboPowered by Blogger.