முதல்வர் பதவிக்கு தகுதியான நடிகர் யாரும் இல்லை

நடிகர்கள் அரசியலில் ஆர்வம் காட்டுவது ஏன் என்பது குறித்து நடிகர் சத்யராஜ் பேட்டி ஒன்றில் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.


தமிழகத்தில் கடந்த மாதம் 21ஆம் தேதி வெளியான 'கனா' திரைப்படம் நல்ல வெற்றியை பெற்ற நிலையில் கடந்த 3ஆம் தேதி இந்த படம் கேரளாவில் ரிலீஸ் ஆகியது. கொச்சியில் இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட சத்யராஜ் அதன்பின் பிரபல மலையாள தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

நடிகர்கள் அரசியலுக்கு வருவது மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதற்காக அல்ல. முதல்வர் பதவியை குறி வைத்தே நடிகர்கள் அரசியலுக்கு வருகின்றனர். முதல்வர் பதவியை ஏற்கும் அளவுக்கு தகுதியான நடிகர்கள் யாரும் இல்லை.

அரசியல் என்றால் ஆரம்பத்தில் இருந்தே மக்களுக்கு சேவை செய்து மக்களின் தேவைகளை புரிந்து மக்களின் துன்பங்களை தெரிந்து கொள்ள வேண்டும். ஆனால் நடிகர்களுக்கு இவை தெரிய வாய்ப்பு இல்லை

கேரளாவில் பினராய் விஜயன் தலைமையிலான கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி செய்வது போல் தமிழகத்திலும் நல்லக்கண்ணு அய்யா அவர்களின் தலைமையில் கம்யூனிஸ்ட் ஆட்சி அமைய வேண்டும் என்பதே எனது விருப்பம். அவரை விட முதல்வர் பதவிக்கு தகுதியானவர்கள் யாரும் இல்லை என்று சத்யராஜ் கூறினார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News  #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines  #Latest Tamil News #India News  #World News #Tamil Film #Jaffna #Srilanka #colombo
Powered by Blogger.