காதலர் தினத்தில் ரிலீஸ் ஆகும் கார்த்தி படம்?

'தீரன் அதிகாரம் ஒன்று', 'கடைக்குட்டி சிங்கம்' என அடுத்தடுத்து வெற்றி படங்களை கொடுத்த நடிகர் கார்த்தி தற்போது நடித்து முடித்திருக்கும் படம் 'தேவ்'. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.


இந்த நிலையில் இந்த படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளிவந்துள்ளது.

தேவ்' திரைப்படம் பிப்ரவரி முதல் வாரம் வெளியாக வாய்ப்பு உள்ளதாக கடந்த சில நாட்களுக்கு முன் தகவல்கள் வெளிவந்த நிலையில் தற்போது வந்த தகவலின்படி இந்த படம் பிப்ரவரி 14ஆம் தேதி 'காதலர் தினத்தில் வெளிவரவுள்ளதாகவும் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

கார்த்தி, ரகுல் ப்ரித்திசிங், பிரகாஷ்ராஜ், ரம்யாகிருஷ்ண்னன் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை ரஜத் ரவிசங்கர் இயக்கியுள்ளார். வேல்ராஜ் ஒளிப்பதிவில், அந்தோணி ரூபன் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News  #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines  #Latest Tamil News #India News  #World News #Tamil Film #Jaffna #Srilanka #colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.