சின்னம்மாவை சிறையில் சந்தித்த விஜயசாந்தி!


சின்னம்மா என்று தொண்டர்களால் அழைக்கப்பட்ட சசிகலா, மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு உதவியாளராக இருந்து வந்தார். தற்போது இவர் அதிகமான சொத்துகுவிப்பு வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வருகிறார்.


இவர் தற்போது பெங்களூர் சிறையில் சிறைவாசம் அனுபவித்து வருகிறார். அண்மையில் அப்போதைய லேடி சூப்பர் ஸ்டார் பிரபல நடிகை விஜயசாந்தி, சசிகலாவை சந்திக்க பெங்களூர் சென்றுள்ளார். இவர்களின் இந்த சந்திப்பு ஒரு மணி நேரம் நடந்ததாக சொல்லப்படுகிறது. நடிகை விஜயசாந்தி, ரஜினி மற்றும் கமலடன் இணைந்து நடித்துள்ளார்.


1998 முதல் இவர் அரசியல் இறங்கி பணியாற்றத் தொடங்கினார். இந்நிலையில் சசிகலாவிடம் வரும் நாடாளுமன்ற தேர்தலில் தான் இருக்கும் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவளிக்க கூறியதாக சொல்லப்படுகிறது. மேலும் சசிகலா அதிமுக பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற போது நேரில் சென்று சசிகலாவை விஜய சாந்தி வாழ்த்தியதோடு தினகரன் ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட்ட போது அவருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Powered by Blogger.