வலுவடையும் அமெரிக்க – சீன வர்த்தக முரண்பாடு: முக்கிய பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு?


அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கும், சீன துணை ஜனாதிபதி  வாங் சீ ஷானிற்கும் (Wang Qi-shan) இடையில் முக்கிய சந்திப்பொன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அமெரிக்காவிற்கும் சீனாவுக்கும் இடையில் தொடரும் வர்த்தக ரீதியிலான பதற்றத்தை குறைக்கும் நோக்கிலேயே இந்த முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு நடைபெறவுள்ளதாக South China Morning Post என்ற நாளோடு செய்தி வெளியிட்டுள்ளது. குறித்த சந்திப்பு நடைபெறவுள்ள திகதி மற்றும் இடம் தொடர்பில் இதுவரையில் இறுதித்தீர்மானம் எதுவும் எட்டபடவில்லை எனவும், இதுதொடர்பிலான உத்தியோகப்பூர்வ அறிவித்தல் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. எனினும், இம்மாத இறுதியில் சுவிட்ஸர்லாந்தில் நடைபெறவுள்ள உலகப் பொருளியல் கருத்தரங்கின் போது குறித்த சந்திப்பு நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதேவேளை, அண்மைக்காலமாகவே அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான வர்த்தக ரீதியிலான முரண்பாடு வலுவடைந்து வருவதாக அரசியல் விமர்சகர்கள் பலரும் தெரிவித்திருந்தமைக் குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.