வெண்கரம் மாணவர்களுக்கான புத்தாண்டு மகிழ்ச்சி செயற்பாடு!

வெண்கரம் படிப்பக மாணவர்களின் வருடாந்த ஒன்றுகூடலும் நத்தார் - புதுவருடக் கொண்டாட்டமும் கடந்த டிசம்பர் மாதம் 25 ஆம் திகதி சுழிபுரத்தில் உள்ள வெண்கரம் தொழில் வழிகாட்டல் மையத்தில் நடைபெற்றது.


அவுஸ்திரேலியாவில் உள்ள திரு.திருமதி ராதா – நாகா தம்பதிகளின் நிதி அனுசரணையுடன், அவர்களின்  பேரப்பிள்ளைகளின் புதுவருட மகிழ்வளிப்புக் கொண்டாட்டமாக இடம்பெற்ற இந்த நிகழ்வில் அவர்களின் ஏற்பாட்டில் மாணவர்களுக்கு மதிய உணவும் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வில் கலந்துகொண்ட வெண்கரம் படிப்பக மாணவர்கள் மிக்க மகிழ்ச்சியுடன் காணப்பட்டனர். அன்றைய தினம் மாணவர்களுக்கு  மகிழ்வளிப்புச் செயற்பாடுகளும் இடம்பெற்றன.

இதில் வெண்கரம் செயற்பாட்டாளர்களான ஆசிரியர் இதயராஜ், உளவளத்துணையாளர் சுஜியா மற்றும் மனிதம் அமைப்பின் செயற்பாட்டாளர்  நிவேதா ஆகியோர் வளவாளர்களாகக் கலந்துகொண்டனர்.

வெண்கரம் பிரதான செயற்பாட்டாளர் மு.கோமகன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வை வெண்கரம் செயற்பாட்டாளர் திருமதி மயூரி ஒழுங்கமைத்திருந்தார்.

இந்த நிகழ்வில் வெண்கரம் ஆலோசகர்களான, வலிகாமம் வலய ஆசிரிய ஆலோசகர் திருமதி சு.சண்முகேந்திரன், சங்கானை சிவப்பிரகாச மகா வித்தியாசாலை அதிபர் எஸ்.சிறிதரன் மற்றும் வெண்கரம் செயற்பாட்டாளர்களும் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்விற்கு அனுசரணை வழங்கிய திரு.திருமதி ராதா – நாகா தம்பதிகளும் அவர்களின் பிள்ளைகள், பேரப்பிள்ளைகளும் கடந்த (2018) வருடம் பொன்னாலை வெண்கரம் படிப்பகத்திற்கு வருகைதந்து தமது விடுமுறையை வெண்கரம் மாணவர்களுடன் செலவிட்டனர் என்பதும் வெண்கரம் மாணவர்களுக்கான சீருடைகளைப் பெற்றுக்கொள்வதற்கு நிதி உதவி வழங்கினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
tr" style="text-align: left;" trbidi="on">

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.