வௌிநாடு செல்லும் பெண் பணியாளர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி

2018ம் ஆண்டில் வௌிநாடுகளுக்கு வேலைக்காக சென்ற பெண் பணியாளர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக இலங்கை வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் கூறியுள்ளது.

2017ம் ஆண்டில் 68,319 பெண் பணியாளர்கள் வௌிநாட்டுக்கு சென்றுள்ளதுடன், அது 2018ம் ஆண்டு 66,971 ஆக குறைவடைந்துள்ளதாக அந்த பணியகம் கூறியுள்ளது.
கடந்த ஆண்டு 211,502 பேர் வௌிநாட்டு தொழிலுக்காக சென்றுள்ளதுடன், அதில் 68.3 வீதமானோர் ஆண்கள் என்று வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் கூறியுள்ளது.
2017ம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 2018ம் ஆண்டில் வௌிநாடுகளுக்கு தொழிலுக்காக சென்ற ஆண்களில் தொகை அதிகரித்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2018ம் ஆண்டில் இலங்கைத் தொழிலாளர்கள் அதிகளவில் கட்டார் நாட்டுக்கு சென்றுள்ளதுடன், குவைட், சவூதி அரேபியா, தென் கொரியா போன்ற நாடுகளுக்கும் அதிகளவில் சென்றுள்ளனர்.
இதேவேளை மத்திய கிழக்கு நாடுகளை விட ஐரோப்பிய மற்றும் ஏனைய நாடுகளுக்கு இலங்கைத் தொழிலாளர்கள் செல்வதில் ஆர்வம் செலுத்துவதை அவதானிக்க முடிவதாகவும் இலங்கை வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் கூறியுள்ளது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News  #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines  #Latest Tamil News #India News  #World News #Tamil Film #Jaffna #Srilanka #colombo
Powered by Blogger.