நோர்வே மாநகர துணை மேஜர் ஹம்சாயினிுக்கு எதிராக கிளர்ந்து எழுந்துள்ள ஈழத்து இளைஞர்கள்

இலங்கையில் சுற்றுலா மேற்கொண்டு வந்துள்ள நேர்வே மாநகர பிரதி மேஜர் ஹம்சாயினி பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டு வருகின்றார் அந்த வகையில் விடுதலைப்புலிகள்
பெண்களை மதிக்கவில்லை பேச்சுவார்த்தைக்கு பெண்களை பிரதிநிதித்துவப்படுத்தவில்லை என்றெல்லாம் சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டு வரும் நிலையில். அவர் களியாட்ட விடுதியில் மதுப்போத்தல்களுடனும் அரைகுறை ஆடையுடனும் இருக்கும் புகைப்படங்களும் வெளியாகியுள்ள நிலையிலேயே தமிழ் இளைஞர்கள் அவருடைய கருத்துக்களுக்கு எதிராக ஈழத்து இளைஞர்கள் தமது எதிர்ப்பினை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றி வருகின்றனர்

 பாடம்நடாத்த உனக்கு தகுதியுள்ளதாவென சுயபரிசோதனை செய்துகொள்  ஹம்சாயினி

ஈழப் பெண்களின் வீரம் உனக்கு தெரியுமா என்றெல்லாம் வலைத்தளம் முழுவதும் கண்டனங்கள் பரவி வருகின்றது அந்த வகையில் யாழ் பல்கலைக்கழக முன்னாள் மாணவர் ஒன்றியத்தின் தலைவர் கி கிருஷ்ணமீனன் தனது முகநூல் பக்கத்தில் இவ்வாறு பதிவிட்டுள்ளார்
நீங்கள்_வாழும்_இந்த_வாழ்க்கை_எம் ஈழதேவதைகள்_போட்ட_பிச்சை.

நீங்கள் வந்து பெண்ணியம் பெரியாரிசம் பேசுமளவிற்கு எமது பெண்கள் ஒன்றும் தரம் தாழ்ந்து விடவும் இல்லை தாழ்ந்து விட நாம் அனுமதிக்கப் போவதுமில்லை.

வீரத்தின் அடையாளம் எங்கள் ஈழத்துப் பெண்கள் அதில் குளிர்காய்ந்து பதவிகளுக்கு வந்த உங்களுக்கு இங்கு வந்து எமக்கு வந்து சமத்துவம் பெண்ணியம் கற்பிக்க  எந்தத்தகுதியும் இல்லை.

ஈழப்பெண்களுக்கு பாடம் எடுக்கும் நிலைக்கு எவரையும் நாம் அனுமதிக்க தயாராகவும் இல்லை அனுமதிக்க போவதுமில்லை

சுற்றுலா பயணிகளாக பார்வையாளர்களாக பலர் எமது தேசத்திற்குள் வருகின்றீர்கள் வரவேண்டாம் என்று சொல்லவில்லை தாராளமாக வாருங்கள்.

எங்களை அழித்தவர்கள் காட்டிக்கொடுத்தவர்கள் எல்லோருடனும் கைலாகு கொடுத்து அளாவளாவி புகைப்படங்கள் செல்பீ எல்லாம் எடுத்து பதிவேற்றுங்கள் அது உங்கள் உரிமை அதனை யாரும் தடுக்க போவதில்லை.

   ஆனால்  எம் ஈழப் பெண்களுக்கு அறிவுரை கூறுமளவிற்கு இந்த உலகத்தில் எவனுக்கும் தகுதியில்லை.

 விடுதலைப் புலிகள் பெண்களுக்கு சம உரிமை கொடுக்கவில்லை என்று கூறுகின்றீர்களே! உலகிலேயே ஆண்களுக்கு நிகராக இராணுவம் காவல் துறை நீதி நிர்வாகத்துறை என்று அனைத்திலும் தடம் பதித்து தேசியத் தலைவனுக்கு தோழ் கொடுத்தவர்கள் எம் தேசத்து பெண் தெய்வங்கள் என்பதை நீங்கள் அறிவீர்களா? அறிந்திருக்க வாய்ப்பே இல்லை ஏனெனில் மதுப்போத்தல்களுடனும் மதுக்குவளைகளுடனும் வெள்ளைக்காரனுடன் பப் இல் நடனமாடுவார்கள் இதெல்லாம் அறிந்திருக்க வாய்ப்பே இல்லை

 நீங்கள்  வந்து பார்வையிட்டு உங்கள் எண்ணங்களை மேற்கத்தேய மோகங்களை  திணித்துவிட்டுச் செல்ல ஈழத்தமிழர் ஒன்றும் பரதேசிகள் இல்லை.

 எங்களை விற்கும் ஓரு சில  கைக்கூலிகள்தான் வால்பிடித்து வட்டமேசையில் இருத்தி வைச்சு மாநாடு நடத்துங்கள்

ஆனால் தன்மானமுள்ள ஒவ்வொரு ஈழத்  தமிழனும்  கஞ்சியை குடித்தாலும் தன்மானத்தோடும் சுயகௌரவத்தோடும் வாழ்பவர்கள்

கழுத்தில் தாலிக்கு பதில் நஞ்சுக்கொடியும் கையில் பிள்ளைக்கு பதில் பேராயுதமும் ஏந்தி சமராடியவர்கள்  எம்தேச பெண்கள்.

மறந்து விடாதீர்கள்
எமது தியாகங்களை
அழித்து விடாதீர்கள்
எமது வரலாற்றினை
       
என்று உள்ளது அந்த பதிவு. இவ்வாறு பல இளைஞர்கள் ஹம்சாயினிக்கு எதிராக கொதித்தெழுந்துள்ளனர்
Powered by Blogger.