யார் இந்த கம்சாயினி!-மைத்திரியின் கைப்பிள்ளை!

அண்மையில் நோர்வே ஒஸ்லே மாநகரின் பிரதிமேஜர் செல்வி கம்சாயினி இலங்கைக்கு வருகைதந்து அரசியல் தரப்பினர் பலரையும் சந்தித்திருந்தார்.


அதாவது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தொடங்கி அரசியலில் ஆர்வமுடைய பெண்கள் வரை இவரது பட்டியல் நீண்டிருந்தது. இதில் பல ஊடகங்கள் இவரை செவ்வி கண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

வடமாகாண பெண்களுடன் உரையாடும் போதும் ஊடக நோ்காணலிலும் இவர் பகிரங்கமாக ஒரு கருத்தை முன்வைத்திருந்தார். அதாவது விடுதலைப்புலிகளின் பேச்சுவார்த்தை மேடையில் ஏன் ஒரு பெண் அமரவைக்கப்படவில்லை எனவும் அப்படி அமர்ந்திருந்தால் அந்த பேச்சு வெற்றி கண்டிருக்கும் எனவும் அவரது கூற்று அமைந்திருந்தது.

தேசியத்தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் ஏதோ வரலாற்றுத்தவறிழைத்துவிட்டதாக அவர் பிரபலமாக அறிவித்திருந்தார்.
ஒஸ்லோ நகரபிரதிமேஜர் ஒரு விடயத்தை உணரவேண்டும். வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் பெண் சமத்துவத்தை ஒருபோதும் குறைத்து மதிப்படாதவர், என்பதுடன் அன்றைய காலச்சூழல் அதற்கான காரணமாக அமைந்திருக்கலாம். அதுவெயன்றி பெண்ணைக்குறைத்தோ பெண்மையை மதிக்காமலோ இருப்பதற்கு அவர் ஒன்றும் ஒருசில மனிதத்துள் அடங்குபவர் அல்ல, அவர் புனிதர். இனம் வாழ, அது இதம் காண. உடல் வருத்தி உயிர் வெறுத்த புனித யாத்திரையின் உயிர்த்துடிப்பு.

புலம்பெயர்ந்த இவர், வெளிநாட்டு கலாசாரத்தில் வளர்ந்தவர், வாழ்ந்தவர். வாலிபத்தில் கால்பதித்திருக்கும் கம்சாயினி, போர் மௌனித்த போதுகூட அதிக அகவைகளில் இருந்திருக்க  வாய்ப்பில்லை. போராட்டத்தினைப்பற்றியோ அதன் சூட்சுமங்கள் பற்றியோ இவருக்கென்ன தெரியப்போகிறது. இவருக்கு இந்த இலக்கினை வழங்கியது யார்?

ஆனால் ஒன்று மட்டும் உண்மை,  எமது பெண்களின் மூளைகளைச் சலவைசெய்யும் பாரிய பொறுப்போடுதான் இவரது காய்நகர்த்தல் அமைந்திருக்கிறது. யாழில் நடந்த இவரது சந்திப்புக்கு முன்நாள் வடமாகாணசபை உறுப்பினர் சுகிர்தன், வருகை தந்திருந்ததோடு புலம் பெயர் உறவுகள் உணர்வுபூர்வமான போராட்டங்களை முன்னெடுப்பது எமது மக்களுக்கு ஏற்புடையதல்ல என்றும்  எமக்கான தேவை பற்றி ஒஸ்லோ நகரபிரதி மேஜரிடம் கலந்தாலோசிக்கும் படியும் அவரைப்பின்பற்றி.   அரசியலில் எமது பெண்கள் வெற்றிபெறவேண்டும் எனவும்  பெண்களின் அரசியல் பிரவேசத்திற்கும் வெற்றிக்கும் தானும் சுமந்திரன் ஐயாவும் முழுமையான ஆதரவினை வழங்குவோம் எனவும் தானும் ஒரு கருத்தை முன்வைத்திருந்தார்.
இவர்களின் பின்னணி யாதென்பதை எமது பெண்கள் உணரவும் புரிந்துகொள்ளவும் வேண்டும்.  கம்சாயினியின் கருத்து ஒரு நச்சுவிதை. பிடுங்கி எடுக்காதுவிட்டால்  சர்வமும் அழிந்துவிடும் என்பது உறுதி.

நாம் நாமாக இருக்கும் வரை யாராலும் அழித்துவிடமுடியாது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News  #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines  #Latest Tamil News #India News  #World News #Tamil Film #Jaffna #Srilanka #colombo

No comments

Powered by Blogger.