யேர்மனி நிதி அனுசரணையில் மெகா கல்வி நிலையம்!

யேர்மனி பேர்லினில் உள்ள அம்மா உணவகத்தின் நிதி அனுசரணையில் விசுவமடுவில் அமைந்துள்ள M. E. C. A STUDY CENTRE(மெகா கல்வி நிலையம்)


புதிய வகுப்பறைகள் திறப்பும் சாதனையாளர் கௌரவிப்பும் பரிசளிப்பு விழாவும் இன்று மாலை கல்வி நிலைய இயக்குனர் திரு.சுரேஸ்குமார் அவர்கள் தலைமையில் இடம் பெற்றது இந்நிகழ்வில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் திரு.கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பிரதம விருந்தினராக கலந்து கொண்டதுடன் சிறப்பு விருந்தினர்களாக கிளி/புன்னை நீராவி அதிபர் திரு.கோடீஸ்வரன் அவர்களும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் உதவி அமைப்பாளரும் கிளி சோலைவனம் விருந்தகத்தின் தலைவருமாகிய திரு.தமிழழகன் அவர்களும் கலந்து சிறப்பித்ததுடன் கௌரவ விருந்தினர்களாக கிளி/கரைச்சி பிரதேச சபை உறுப்பினர்களான திரு.ஜெகதீஸ்வரன், திரு.புவனேஸ்வரன் ஆகியோரும் முல்லைமாவட்ட முன்னணியின் அமைப்பாளர் திரு.விஜயகுமார் அவர்களும் துணுக்காய் பிரதேச சபை உறுப்பினரும் கலந்து சிறப்பித்தார்கள். புதிய வகுப்பறைகளை நிகழ்வின் பிரதம விருந்தினர் திரு.கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் சிறப்பு விருந்தினர் அதிபர் திரு.கோடீஸ்வரனும் திறந்து வைத்தார்கள்.மேற்படி கல்வி நிலையத்தில் கற்று பல்கலை தெரிவாகிய நான்கு மாணவர்களுக்கான கௌரவிப்பும் தவணைப்பரீட்சையில் முதல் மூன்று இடங்களைப்பெற்ற மாணவர்களுக்கான பரிசுப்பொருட்களும் வழங்கப்பட்டதுடன் குறித்த கல்வி நிலையத்தில் கற்கின்ற 175 மாணவர்களுக்குமான கற்றல் உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.