வா்த்தக முரண்பாடுகளைத் தீா்க்கவுள்ள அமெரிக்க சீன உறவு!!
சீனாவிற்கு உதவுவதன் மூலம் அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான வர்த்தக முரண்பாடுகள் தீர்த்துக்கொள்ளப்படும் என, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் சிரேஷ்ட பொருளாதார ஆலோசகர் தெரிவித்துள்ளார்.
வெள்ளை மாளிகையில் செவ்வாய்க்கிழமை ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், “அமெரிக்காவின் தீர்வை கட்டண ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் காரணமாக சீன பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது.
இந்நிலையில், இந்த வீழ்ச்சியிலிருந்து சீனாவை மேலெழச் செய்வதற்கு ஜனாதிபதி விரும்புகிறார். இந்நிலையில், இது தொடர்பாக கலந்துரையாடப்பட்டு வருகிறது.
இதேவேளை, திறந்த பொருளாதார கொள்கையில் அமெரிக்காவை நாட்டிற்குள் அனுமதிக்க சீனா விரும்பினால், அங்கு ஏற்றுமதி விற்பனை நடவடிக்கைகளில் ஈடுபடவும் அமெரிக்கா தயாராகவுள்ளது. இது நிச்சயமாக சீனப் பொருளாதாரத்திற்கு பயனளிக்கும் எனத் தெரிவித்தார்.
இவ்வாரம் முன்னெடுக்கப்படவிருந்த அமெரிக்காவுடனான சீன வர்த்தக பேச்சுவார்த்தை ஜனாதிபதி ட்ரம்ப் நிர்வாகத்தினால் ஏற்கனவே நிராகரிக்கப்பட்டது.
தற்போது சீன உயர்மட்ட அதிகாரிகளுடனான சந்திப்பிற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய சீன துணை வர்த்தக அமைச்சர், துணை நிதியமைச்சர் ஆகியோருக்கும் அமெரிக்க உயரதிகாரிகளுக்கும் இடையிலான சந்திப்பு இம்மாத இறுதி தினங்களில் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #colombo

.jpeg
)

கருத்துகள் இல்லை