‘வை திஸ் கொலைவெறி ‘பாடலின் சாதனையை முறியடித்தார் சாய் பல்லவி

நடிகர் தனுஷின் ‘வை திஸ் கொலைவெறி’ பாடல் அத்தனை பேரின் மனங்களையும் கொள்ளை கொண்டதுடன் யூடியூப்பில் பெரும் சாதனையும் படைத்தது.


தனுஷ் நடிப்பில் வந்த இப்படத்தில் அவரே பாடலையும் எழுதி பாடியிருந்தார்.

இப்பாடல் வெளியாகி 28 நாட்களில் 20 மில்லியன் பார்வைகளைப் பெற்று யூடியூப் இல் மிக முக்கிய சாதனை படைத்தது. அனிருத் இசையமைத்த இப்பாடல் யூடியூப் இல் தற்போது 17 கோடியே 37 இலட்சம் பார்வைகளைத் தாண்டியுள்ளது.

இந்நிலையில் சாய் பல்லவி நடிப்பில் தெலுங்கில் வெளியான ‘ஃபிடா’ படத்தின் ‘வச்சிண்டே’ பாடல் 17 கோடியே 39 இலட்சம் பார்வைகளைக் கடந்துவிட்டது.

ஏழு வருடங்களுக்கு முன் வந்த தனுஷின் கொலைவெறி பாடல் சாதனை கடந்த 2017 இல் வெளியான ‘வச்சிண்டே’ பாடல் மூலம் சாய்பல்லவி முறியடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News  #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines  #Latest Tamil News #India News  #World News #Tamil Film #Jaffna #Srilanka #colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.