வவுனியா கனகராஜன்குளம் பகுதி பாடசாலைமாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு!!

வவுனியா கனகராஜன்குளம் பகுதியில் போரால் பதிக்கப்படவர்களின் பிள்ளைகளான 203 பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் 12.01.2019 அன்று கனகராஜன்குளம் ம.வி பாடசாலையின் மண்டப கட்டிடத்தில் வைத்து வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் அவர்களால் வழங்கிவைக்கப்பட்டது.


இந் நிகழ்வில் வவுனியா வடக்கு பிரதேசசபை உறுப்பினர் ஜெயரூபன் வவுனியா தெற்கு பிரதேசசபை உறுப்பினர் சசிகரன்,இணையும் கரங்கள் அமைப்பின் தலைவர் அமிர்தசீலன்,இணையும் கரங்கள் அமைப்பின் முன்னாள் தலைவர் சசி வவுனியா புதுக்குளம் பண்டிதமணி வித்தியாலயத்தின் அதிபர் கனகேஸ்வரன் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வுக்கான நிதி அனுசரணையை லண்டனை சேர்ந்த தோழர் பரமேஸ் வழங்கியிருந்தார். இவ் நிகழ்விற்கான ஒழுங்கமைப்பை இணையும் கரங்கள் அமைப்பு ஏற்பாடு செய்திருந்தமை
குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட இணையும் கரங்கள் அமைப்பைச் சோ்ந்த 580 போ் நெடுங்கேணி பிரதேச செயலகத்திற்குட்பட்டவா்கள் விசேட தேவைகுட்பட்டவா்கள் இருக்கிறாா்கள்.

யுத்தம் முடிவடைந்து பத்து வருடங்களாகியும் நிரந்தர வாழ்வாதாரங்கள் மற்றும் அடிப்படை வசதிகள் கிடைக்கவில்லை அவற்றை அரசாங்கம் பெற்று தரவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #colombo

No comments

Powered by Blogger.