மண் பானை பொங்கல்!

அபிவிருத்தி பேசுவோம்
அதை செயலில் காட்டுவோம்
மண் பானை வேண்டுவோம்
உழைப்பவன் மகிழ பொங்குவோம்


மண் பானைப் பொங்கல்
மாசு இல்லாத விருந்து
மலரட்டும் மருந்தில்லா உலகு
மண்ணின் மக்களுக்கு
இலாபத்தை பெருக்கு...

எல்லோருக்கும் சேர்த்து ஒன்றாக பொங்குங்கள்
இல்லாதவருக்கு கொடுத்தே உண்ணுங்கள்
ஆபிரிக்கதேசத்துக்கு பாதை அமைத்துத்தாருங்கள்
பசியால் வாடும் ஆப்பிரிக்க தம்பிக்கு பொங்கல் கொண்டு சேருங்கள்....

எளிமைக்கு இலக்கணம் ஆகுங்கள்
பண்பாட்டை என்றும் போற்றுங்கள்
தமிழ் பேசி மகிழுங்கள்
மது தவிர்த்து வாழுங்கள்
சிறியவன் கருத்தை கேளுங்கள்
சிறுவர் எண்ணத்தை மதியுங்கள்
தையோடு புதிதாய் மாறுங்கள்...

வட்டக்கச்சி
வினோத்

No comments

Powered by Blogger.