விசாரணையை திசைதிருப்ப முயன்றவருக்கு தடுப்பு காவல்

மட்டக்களப்பு, வவுணதீவு பகுதியில் பொலிஸார் இருவர், சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக இடம்பெற்றுவரும் விசாரணையை திசை திருப்ப முயன்றவர், கைது செய்யப்பட்டு 90 நாட்கள் பொலிஸ் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் உயரதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.


வவுணதீவைச் சேர்ந்த 31 வயதுடைய ஜோச் நிரஞ்சன் என்பவரையே, தடுப்புக்காவலில் வைத்து விசாரணைகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக வவுணதீவு பொலிஸ் உயரதிகாரி தெரிவித்துள்ளார்.

வவுணதீவு- வலையிறவு பாலம் அருகிலுள்ள பொலிஸ் வீதி சோதனைச் சாவடியில் பணியிலிருந்த இரு பொலிஸாரை, கடந்த நவம்பர் 19ஆம் திகதி  நள்ளிரவு இனந்தெரியாதோர், துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்துவிட்டு அவ்விடத்திலிருந்து தப்பிச்சென்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக, பொலிஸ்மா அதிபரினால் நியமிக்கப்பட்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜெயசிங்க தலைமையிலான சி.ஐ.டி.யினர் விசாரணையினை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் ஜோச் நிரஞ்சன் என்ற குறித்த இளைஞன், இக்கொலைச் சம்பவம் தொடர்பாக தகவல் தெரியுமென சி.ஐ.டி.யினரிடம் தெரிவித்துவிட்டு பின்னர் தெரியாதென விசாரணையை திசைதிருப்பியுள்ளார். ஆகையால், சந்தேகநபரை  90 நாள் பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து சி.ஐ.டி.யினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேவேளை இச்சம்பவம் தொடர்பாக ஏற்கனவே சந்தேகத்தின் பேரில்  விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் புலனாய்வுத்துறை உத்தியோகத்தரான அஜந்தன் எனப்படும் கதிர்காமதம்பிராசா குமரன் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் அவரிடமிருந்து வெளிப்படுத்தப்பட்ட தகவலுக்கமைய புலிகளின் சாள்ஸ் அன்டனி படைப்பிரிவில் கடமையாற்றிய கிளிநொச்சியைச் சேர்ந்த 48 வயதுடைய இமையன் எனப்படும் வாசலிங்கம் சர்வானந்தன கைது செய்யப்பட்டு பொலிஸ் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News  #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines  #Latest Tamil News #India News  #World News #Tamil Film #Jaffna #Srilanka #colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.