நாடாளுமன்ற மோதல் விவகாரம்: சபாநாயகரிடம் அறிக்கை!
நாடாளுமன்றத்தில் அண்மையில் ஏற்பட்ட குழப்பநிலை தொடர்பான விசாரணை அறிக்கையை சபாநாயகரிடம் இன்று (செவ்வாய்க்கிழமை) கையளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.
அதன் பின்னர், குறித்த விசாரணை அறிக்கை சட்டமா அதிபருக்கு அனுப்பிவைக்கப்படும். நாடாளுமன்றத்தில் குழப்பத்தை ஏற்படுத்தியவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ள முடியுமா என்பது தொடர்பில் ஆராயும் வகையில், குறித்த அறிக்கை சட்டமா அதிபருக்கு அனுப்பப்படும் என பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி குறிப்பிட்டுள்ளார்.
இந்த விசாரணை அறிக்கையில் ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு மற்றும் மக்கள் விடுதலை முன்னணியைச் சேர்ந்த ஒரு உறுப்பினர் மீதும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த வருடம் நவம்பர் மாதம் 15, 16, மற்றும் 17ஆம் திகதிகளில் நாடாளுமன்றத்தில் ஆளும் மற்றும் எதிர்த்தரப்புக்கு மத்தியில் ஏற்பட்ட மோதலில் சில உறுப்பினர்கள் தாக்கப்பட்டனர். நாடாளுமன்ற சொத்துக்களுக்கும் சேதம் ஏற்பட்டது. இச்சம்பவம் சர்வதேச அளவில் விமர்சனங்களை தோற்றுவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #colombo

கருத்துகள் இல்லை