கூட்டமைப்பே தமிழர்களுக்கான தீர்வினை பெற்றுத்தர வேண்டும்!
தமிழர்களுக்கான தீர்வினை தமிழ் தேசிய கூட்டமைப்பினரே பெற்றுத்தர வேண்டுமென அரசியல் கைதியாகவிருந்து விடுவிக்கப்பட்டவரான வீரசிங்கம் சுலக்சன் வலியுறுத்தியுள்ளார்.
அதன்படி, அரசியல் கைதிகளின் விடுதலை, காணாமலாக்கப்பட்டோருக்கான பதில், வடக்கு கிழக்கு இணைப்பு மற்றும் மாகாணங்களுக்கு காணி பொலிஸ் அதிகாரம் போன்ற விடயங்களில் கூட்டமைப்பினர் தீர்வினைப்பெற்றுத்தர வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
யாழ். ஊடக அமையத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட அவர், அரசியல் கைதிகளுக்கு கூட்டமைப்பினரின் பதில் என்ன? என்ற தலைப்பில் ஊடக அறிக்கையொன்றினை வெளியிட்டு, உரையாற்றிய போதே இதனை தெரிவித்துள்ளார்.
இதன்போது மேலும் தெரிவித்த அவர், ” சிங்கள பேரினவாதிகளிடமிருந்து தமிழ் மக்களுக்கு எதையும் பெற்றுக்கொள்ள முடியாது என, சர்வதேச ஊடகங்களை அழைத்தும், ஐ.நா. சபைக்குச் சென்றும், பகிரங்கமாக சர்வதேச சமூகத்திற்கு கூறுவதற்கு கூட்டமைப்பின் ஒட்டுமொத்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் தயாரா?“ என்றும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #colombo

கருத்துகள் இல்லை