இராணமடு மண் அகழ்வை நிறுத்துவதற்கு பிரதேசசபையில் தீர்மானம்

போரதீவுப்பற்று பிரதேசசபையின் வீதிகளை பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்டுவரும் மண் அகழ்வுகளை நிறுத்துவதற்கு பிரதேசசபையின் அமர்வில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.


போரதீவுப்பற்று பிரதேசசபையின் இந்த ஆண்டுக்கான முதல் அமர்வு இன்று (வெள்ளிக்கிழமை) பிரதேசசபையின் தவிசாளர் யோ.ரஜனி தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது போரதீவுப்பற்று பிரதேசத்தில் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் தொடர்பிலான முன்மொழிவுகள் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டன.

அத்துடன் போரதீவுப்பற்று பிரதேசத்தில் எதிர்கொள்ளப்படும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் இங்கு கலந்துரையாடப்பட்டது.

அதன்படி போரதீவுப்பற்று பிரதேசசபைக்குட்பட்ட இராணமடு பகுதியில் மேற்கொள்ளப்பட்டுவரும் மண் அகழ்வுகள் காரணமாக அப்பகுதியில் உள்ள வீதிகள் கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளமை தொடர்பிலும், குறித்த மண் அகழ்வினால் மக்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பிலும் இங்கு ஆராயப்பட்டது.

இதன் ஒருகட்டமாக மண் அகழ்வுக்கு கனரக வாகனங்கள் பயணிக்கும் பிரதேசசபைக்குரிய வீதிகளை புனரமைக்கும் வரையில் கனரக வாகனங்கள் செல்வதற்கு தடைசெய்வது என  தீர்மானிக்கப்பட்டது.

பிரதேசசபையில் எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கு அனைத்து கட்சி உறுப்பினர்களும் தங்களது ஆதரவினை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News  #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines  #Latest Tamil News #India News  #World News #Tamil Film #Jaffna #Srilanka #colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.