சட்டத்தரணிகளை சிறுமைபடுத்த வேண்டாம்

சட்டத்தரணிகளை பாராட்டாவிடினும், சிறுமைபடுத்தும் விதத்தில் செய்திகளை வெளியிட வேண்டாமென  யாழில். உள்ள சிரேஷ்ட சட்டத்தரணி ஒருவர் ஊடகங்களிடம் கோரிக்கைவிடுத்துள்ளார்.

அண்மையில் யாழில். உள்ள முன்னணி சட்டத்தரணிகளில் ஒருவரான சர்மினி விக்னேஸ்வரன் சந்தேகநபர் ஒருவரை நீதிமன்றில் சரணடையவைத்தமை தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளது.
இவ்விடயம் தொடர்பில் யாழ்ப்பாணத்தில் உள்ள சிரேஷ்ட சட்டத்தரணி ஒருவர் கருத்து வெளியிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “குறிப்பாக குற்ற வழக்கு ஒன்றில் பொலிஸாரினால் தேடப்படும் சந்தேகநபர் ஒருவர் நீதிவானிடம் நேரடியாக சரணடையும் உரிமை உள்ளது. சட்டத்தரணிகள் ஊடாக சந்தேகநபர் சரணடைவதை ஏற்பதோ அல்லது மறுப்பதோ நீதவானின் அதிகாரத்திற்குட்பட்டது.
பொலிஸாரால் கைது செய்யப்பட்டால், தான் தாக்கப்பட்டு அல்லது சித்தரவதைக்குட்படுத்தப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்படலாம் என்ற கரணமாகவே சட்டத்தரணிகள் ஊடாக சந்தேக நபர்கள் நீதிமன்றில் சரணடைகின்றனர். இந்த நடைமுறை மிக நீண்ட காலமாகவே உள்ளது.
ஆனால் ஒரு குற்றம் தொடர்பில் அடையாள அணிவகுப்பு நடத்தப்பட வேண்டியிருந்தால் சரணடையும் சந்தேகநபரை பொலிஸில் ஒப்படைக்குமாறு சம்மந்தப்பட்ட சட்டத்தரணிக்கு நீதவான் அறிவுறுத்தல் வழங்க முடியும். குறித்த அவ்வறிவுறுத்தலை சட்டத்தரணிகள் நடமுறைப்படுத்த வேண்டும்.
பொலிஸ் நிலையங்களில் குற்ற விசாரணைகளின் போது சந்தேகநபர்களின் மனித உரிமைகள் மோசமாக மீறப்பட்டமை தொடர்பான ஏராளமான சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
இவ்வாறு பதிவான சம்பவங்கள் மீதான சட்டத் தீர்ப்புகள் இலங்கை உயர் நீதிமன்றத்தினால் அண்மைக்காலம் வரையில் தொடர்ந்து வழங்கப்பட்டுவந்துள்ளது.
இந்தநிலையில் தன்னை நம்பி நாடிய ஒரு பிரஜையின் அடிப்படை உரிமைகளை பாதுகாப்பதற்காக பொலிஸார் உட்பட அதிகார சக்திகளுடன் முரண்படுவதற்கும், மோதுவதற்கும் துணியும் சட்டத்தரணி எவரையும் பாராட்டாவிட்டாலும், சிறுமைபடுத்தும் விதத்தில் செய்திகளை உருவாக்கி வெளிவருவது நீதியானது அல்ல“ என அவர் கவலை தெரிவித்துள்ளார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News  #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines  #Latest Tamil News #India News  #World News #Tamil Film #Jaffna #Srilanka #colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.