யுத்தத்தினால் பாதிக்கப்பட்டகளுக்கு நல்லாட்சி அரசாங்கத்திலும் எவ்வித உதவிகளும் வழங்கப்படவில்லை
இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் உள்ள மாணவர்களுக்கு வழ்வாதார மற்றும் கற்றல் உதவிகள் வழங்கி வைப்பதற்கான பல கோரிக்கைகள் அரசாங்கத்திற்கு விடுக்கப்பட்டிருந்தன.
எனினும் இதுவரை எந்த உதவிகளும் குறித்த பிரதேசங்களை முழுமையாகச் சென்றடையவில்லை. குறித்த பிரதேசத்தில் கல்விச் செயற்பாடுகள் மற்றும் ஆசிரியர் பற்றாக்குறை போன்ற பிரச்சினைகள் காணப்படுகின்றன. பல பாடசாலைகளில் வகுப்பறைக் கட்டடங்கள், தளபாடப் பற்றாக்குறை உள்ளிட்ட பல குறைபாடுகள் நிலவுகின்றன.
கல்வி அமைச்சினால் வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி மாவட்ட மாணவர்கள் 8432 பேருக்கு பாடசாலைச் சீருடை மற்றும் பாதணிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் பாடசாலை ரீதியாக இனம் காணப்பட்டு அவர்களிற்கான இந்த கற்றல் உதவிகள் வழங்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அடுத்து வரும் மாதங்களில் 1500 ஆசிரியர்களிற்கு ஆசிரிய நியமனம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #colombo
கருத்துகள் இல்லை