ஈழத்தவரான நோர்வே பிரதி மேயரும் ஈழப்பெண்களும் சந்திப்பு.

ஈழத் தமிழரான  நோர்வே - ஒஸ்லோ மாநகர பிரதி மேயர்  கம்சாயினி
குணரட்ணத்துக்கும் மகளிர் அமைப்புக்களுக்கும் இடையிலான கலந்துரையாடல்  இன்று (06 .01.2019)  யாழ்ப்பாணம் புகையிரத நிலைய வீதியில் அமைந்துள்ள வலம்புரி  விருந்தினர் விடுதியில் இடம்பெற்றது.

 இந்தக் கலந்துரையாடலை இலங்கை கொள்கைகளுக்கான பேரவை ( Centre for Public Policies) ஒழுங்குபடுத்தியிருந்தது. இந்த நிகழ்விற்கு வட மாகாணத்தைச் சேர்ந்த மகளிர் அமைப்புக்களின் பிரதிநிதிகள், உள்ளூராட்சி அமைப்புக்களின் பெண் பிரதிநிதிகள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
      பெண்கள் விழிப்புணர்வு பெறவேண்டிய பத்து விடயங்களை உள்ளடக்கியதாக அவரது கலந்துரையாடல் அமைந்திருந்தது.
1.அரசியலை நம்புதல்
2.வரிப்பணத்தைச் செலுத்துதல்
3.தொழிற்சங்கங்களின் வளர்ச்சி
4.யாவருக்கும் ஒரே தன்மையான பாடசாலை.
5.பெண்கள் முடிவெடுக்கும் ஆற்றல்.
( பிள்ளை பெறுதல், வாழும் முறை,)
6.சமத்துவமான லீவு.( குழந்தை பிறப்பின் பின் தந்தையும் தாயும் இணைந்து வளர்த்தல்)
7.பாகுபாடற்று மொழியை சிறுவயதிலேயே
கற்றல்.
8.விகிதாசாரப்பிரதி நிதித்துவம் .
9.யாராக இருந்தாலும் அவரவர் வாழ்வுரிமையை மதித்தல்.
( உ-ம். ஆண் ஆணைத்திருமணம் செய்தல்)
10.எதிர்மறை சமூக சிந்தனையை தூண்டாமை.

                   ஒஸ்லோ மாநகர பிரதி மேயர் கம்சாயினி குணரட்ணம் இலங்கையில் பிறந்து, தனது மூன்றாவது வயதில் நோர்வே நாட்டுக்குப் புலம்பெயர்ந்தவராவார்.
நேர்வே ஒஸ்லோ பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர்.தமிழ் இளைஞர் அமைப்பில்
(Tamil yuoth organization)  இணைந்து புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் தமிழர்களின் கலை, கலாசார, பண்பாட்டு வளர்ச்சிக்கான நிகழ்வுகளை நடாத்தியவர். அத்தோடு  இனவாதத்துக்கு எதிரான இளையோர் அமைப்பின்( Youth Against Racism) உப தலைவராகவும் செயற்பட்டு வந்தவர்.
2015 அக்டோபர் மாதம் ஒஸ்லோவில் நடைபெற்ற மாநகராட்சித் தேர்தலின் மூலம் நோர்வேயின் மிக வயது குறைந்ந பிரதி மேயராகத் தெரிவு செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
 



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.