உப்பை தின்றுவிட்ட சானாக்கிய சம்பந்தன்!
உரிமைகளை கேளுங்கள், அடக்குமுறைகளை தட்டிக் கேளுங்கள், ஆக்கிரமிப்புகளுக்கு எதிர்ப்பு தெரிவியுங்கள் என்றெல்லாம் கேட்டபோது
அது யதார்த்தம் அல்ல. நடைமுறையில் சாத்தியம் அல்ல என்று மண்டையில் மிளகாய் அரைத்தீர்கள்.
உரிமை அரசியல் சரிவராது, அபிவிருத்தி அரசியலே தேவை என்று பாடம் எடுத்தீர்கள்.
கடைசியில் எதிர்க்கட்சித் தலைவர் பதவியுமில்லை. இனவாதி கையில் ஆளுநர் பதவி.
யதார்த்தம் என்று மூச்சுக்கு முன்னூறு தடவை சொன்னவர்களுக்கு யதார்த்தத்தில் யாரிடம் அதிகாரம் இருக்கிறது என்று தெரியாமல் போனது சோகம்.
"எங்கட உப்பைத் தின்றுவிட்டு...." என்று சுமந்திரன் கொதிக்க வேண்டிய நேரம் இதுதான்.
தேவையில்லாமல் சிங்களவர்களின் அதிகார சண்டையில் சார்புநிலை எடுத்துவிட்டு இப்போது அப்போது இதயத்தால் இணைந்த மைத்திரியிடம் எதையும் கேட்கமுடியாத நிலை.
எதிர்கட்சி தலைவர் பதவியை பிடுங்கியபோது ரணிலும் , கரு ஜெயசூரியவும் ஏனென்னு கேட்கவுமில்லை.
வெட்கமேயில்லாமல் வரவுசெலவு திட்டங்களையும் ஆதரித்துவிட்டு நிற்கிறது கூட்டமைப்பு.
ஒன்றில் தேர்தல் அறிக்கையில் சொன்னமாதிரி உரிமை அரசியலை செய்திருக்கலாம் அல்லது நடுநிலை எடுத்து ஆளுநர் நியமனங்களை தடுத்திருக்கலாம்.
இப்போது அதுவும் இல்லாமல் இதுவும் இல்லாமல் அம்பலப்பட்டு நிற்கிறீர்கள்.
கூட்டமைப்பு என்பது ரணில் தலைமையிலான ஐக்கிய தேசியக்கட்சிக்கு ஆதரவு கொடுத்து அமெரிக்க இந்திய நலன்களை பேணுவதற்கான அமைப்பே.
அது தமிழர் நலன்களுக்கானதல்ல.
உரிமைகள் வேண்டும் என்பவர்கள் நேர்மையாக அதை முன்னெடுப்பவர்களுக்கு தேர்தலில் வாக்களியுங்கள்.
உரிமைகள் வேண்டாம் அபிவிருத்தி வேண்டும் என்ற போதையில் இருப்பவர்கள் இடைத்தரகர்களான கூட்டமைப்பிற்கு வாக்களிப்பதைவிட முதலாளிகளுக்கே வாக்களிக்கலாம்.

கருத்துகள் இல்லை