சம்­பந்­த­னுக்கு வீட்டை கொடுக்­கி­றார் மகிந்த

எதிர்­க்கட்­சித் தலை­வ­ருக்­கான உத்­தி­யோ­க­பூர்வ இல்­லத்தை, தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வ­ரும், முன்­னாள் எதிர்­கட்­சித் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்­த­னுக்கு விட்­டுக்­கொ­டுக்க மகிந்த ராஜ­பக்ச தீர்­மா­னித்­துள்­ளார் என்ற தக­வல்­கள் வெளி­யா­கி­யுள்­ளன.


கூட்டு அரசு ஆட்­சி­ய­மைத்­த­போது தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வர் இரா.சம்­பந்­தன் எதிர்­கட்­சித் தலை­வ­ரா­கப் பத­வி­யேற்­றார். கடந்த ஒக்­ரோ­பர் மாதம் ஏற்­பட்ட அர­சி­யல் குழப்­பங்­களை அடுத்து ஐக்­கிய தேசிய முன்­னணி அரசு தற்­போது ஆட்­சிய அமைத்­துள்­ளது.

சுதந்­தி­ரக் கட்சி எதிர்க்­கட்­சி­யாக மாற, மகிந்த ராஜ­பக்ச எதிர்க்­கட்­சித் தலை­வ­ரா­கப் பத­வி­யேற்­றார். இரா.சம்­பந்­தன் எதிர்­கட்­சித் தலை­வர் பத­வியை இழந்­தார்.

எதிர்­கட்­சித் தலை­வ­ரா­கப் பத­வி­யேற்­றுள்ள மகிந்த ராஜ­பக்­ச­வி­டம் நாடா­ளு­மன்­றக் கட்­ட­டத் தொகு­தி­யில் உள்ள எதிர்­கட்­சித் தலை­வர் அலு­வ­ல­கம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டுள்­ளது.

ஆனால் எதிர்­கட்­சித் தலை­வ­ருக்­கான உத்­தி­யோ­க­பூர்வ இல்­லம் இன்­ன­மும் அவ­ரி­டம் ஒப்­ப­டைக்­கப்­ப­ட­வில்லை.

இந்­த­நி­லை­யில் அந்த இல்­லத்­தில் இரா.சம்­பந்­தன் தொடர்ந்து தங்­கி­யி­ருக்­கட்­டும் என்­றும் மகிந்த ராஜ­பக்ச கூறி­யுள்­ளார் என்ற தக­வல்­கள் வெளி­யா­கி­யுள்­ளன.

சம்­பந்­தன் அதில் இருக்­கட்­டும். அர­சி­யல் வேறு தனிப்­பட்ட வாழ்க்கை வேறு. அவர் வயது முதிர்ந்­த­வர். முன்­னர் இருந்த வீட்­டில் மாடி ஏறச் சிர­மப்­ப­டு­கின்­றார் என்­று­தான் இந்த வீடு கொடுக்­கப்­பட்­டது. அதில் அவர் இருக்­கட்­டும் என்று மகிந்த ராஜ­பக்ச கூறி­யுள்­ளார் என்று கூறப்­ப­டு­கின்­றது. 

No comments

Powered by Blogger.