மஞ்சு வாரியருக்கு ஆதரவுக்கரம் நீட்டும் பிரபலம்!

தமிழ், மலையாள திரையுலகில் தற்போது பரபரப்பான சூழல் நிலவுகிறது. தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் ஒரு கோஷ்டி பிரச்சினை கொடுத்து வருகிறது.


மலையாள சினிமாவில் நடிகை கடத்தல் வழக்கில் சிக்கிய திலீப் மீது அங்குள்ள நடிகைகள் அமைப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

திலீப்புக்கு எதிராக நடிகை ரீமா கல்லிங்கல், ரம்யா நம்பீசன், மஞ்சு வாரியர் உள்ளிட்ட பல நடிகைகள் போர்க்கொடி உயர்த்தி உள்ளனர். மஞ்சுவாரியர் நடிகர் மோகன்லாலுடன் இணைந்து ‘ஓடியன்’ மலையாள படத்தில் நடித்தார்.

இப்படம் சில வாரங்களுக்கு முன்னர் பெரிய எதிர்பார்ப்புடன் வெளிவந்தது. ஆனால் எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை.

படம் வெற்றி பெறாததற்கு காரணம் மஞ்சுவாரியர் அப்படத்தில் நடித்திருந்ததுதான் என சமூக வலைதளங்களில் மோகன்லால் ரசிகர்கள் விமர்சித்து வருகிறார்கள்.

இந்த விமர்சனத்தை கண்டு மஞ்சுவாரியரின் தோழியும் நடிகையுமான ரீமா கல்லிங்கல் கோபம் அடைந்தார். அவர் மஞ்சுவாரியருக்கு ஆதரவாக குரல் கொடுத்திருக்கிறார்.

இதுபற்றி அவர் கூறும்போது, ‘இந்த படம் ஹிட் ஆகியிருந்தால் அதன் வெற்றிக்கு காரணம் மஞ்சுவாரியர் என்று யாரும் சொல்லியிருக்கப்போவதில்லை என்பது உறுதி.

அப்படியிருக்கும்போது தோல்விக்கு மட்டும் மஞ்சுவாரியர் மீது வீண் பழிபோடுவது ஏன்?’ என கேட்டு இருக்கிறார் ரீமா.
#Tamilarul.net #Tamil #News #Tamil News  #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines  #Latest Tamil News #India News  #World News #Tamil Film #Jaffna #Srilanka #colombo
Powered by Blogger.