விமான விபத்து!! கலிபோர்னியாவில் சம்பவம்!!

கலிபோர்னியாவில் சிறிய விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்துள்ளதாகவும் இருவர் காயமடைந்துள்ளதாகவும் அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த சம்பவம் லோஸ் ஏஞ்சல்ஸுற்கு தெற்கே, 35 மைல் தொலைவில் உள்ள ஒரேஞ்சு கவுண்டி என்னும் இடத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்றது.

சிறய ரக விமானம் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து குடியிருப்பு ஒன்றில் விழுந்து நொறுங்கியது. இந்த சம்பவத்தில் விமானத்தை செலுத்திய விமானி  உயிரிழந்துள்ளதாகவும், அந்த வீட்டில் வசித்த 4 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த சம்பவத்தில் இருவர் காயமடைந்துள்ளதாகவும், அவர்கள் சிறிய காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதில் விபத்துக்குள்ளான விமானத்தின் சில பாகங்கள் சிதறி அங்கிருந்த குடியிருப்புக்களில் சேதத்தை ஏற்படுத்தியது. இதில் பல வீடுகள் பகுதி மற்றும் முழுமையான அளவில் சேதத்திற்கு உள்ளானது.

இந்நிலையில் அங்கு வந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்புக்குழுவினர், தீயை கட்டுக்குள் கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #colombo.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.