முல்லைத்தீவு மாவட்டச் செயலக அணி சாதனை!!

வட மாகாண விளையாட்டுத் திணைக்களத்தினால் நடாத்தப்பட்ட மாவட்டச் செயலகங்களுக்கு இடையிலான யூடோவில் முல்லைத்தீவு மாவட்ட செயலக அணி ஆண்கள் பிரிவில் முதலாமிடத்தையும், பெண்கள் பிரிவில் இரண்டாமிடத்தையும் பெற்றன.

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இத்தொடர் நடைபெற்றது.

இதில் முல்லைத்தீவு மாவட்ட ஆண்கள் அணி 4 தங்கப் பதக்கத்தையும், 4 வெள்ளி பதக்கத்தையும், 5 வெண்கலப்பதங்களை பெற்று முதலாமிடத்தைப் பெற்றது.

கிளிநொச்சி மாவட்ட செயலக அணி 3 தங்கப் பதக்கத்தையும், 2 வெள்ளி பதக்கத்தையும் 3 வெண்கல பதக்கத்தையும் பெற்று இரண்டாமிடத்தைப் பெற்றது.

வவுனியா மாவட்ட செயலக அணி 2 தங்கப் பதக்கத்தையும், 2 வெள்ளி பதக்கத்தையும் 4 வெண்கலப் பதக்கத்தையும் பெற்று மூன்றாமிடத்தைப் பெற்றது.

பெண்களுக்கான போட்டியில் கிளிநொச்சி மாவட்டச் செயலக அணி 5 தங்கம், 2 வெள்ளி 2 வெண்கலம் பதக்கங்களைப் பெற்று முதலாமிடத்தைப் பெற்றது.

முல்லைத்தீவு மாவட்டச் செயலக அணி 3 தங்கம் , 3 வெள்ளி, 8 வெணகல பதக்கங்களைப் பெற்று இரண்டாமிடத்தையும், வவுனியா மாவட்டச் செயலக அணி 1 தங்கம், 3 வெள்ளிப் பதக்கங்களைப் பெற்று மூன்றாமிடத்தையும் பெற்றுக் கொண்டது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #colombo.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.