நச்சுக் காற்றினால் கண்கள், மூக்குகளில் ரத்தக் கசிவு!!

தாய்லாந்து தலைநகர் பாங்கொக்கில் பரவி வரும் நச்சுக்காற்றினால் மக்களின் கண்கள் மற்றும் மூக்குகளில் ரத்தக்கசிவு ஏற்படுவதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

பாங்கொக்கில் காற்றில் நச்சு கலந்துள்ளது. இந்த நச்சுத்தன்மையுடன் கூடிய பனிப்புகை மக்களின் இயல்பு வாழ்க்கையை பெரிதும் பாதித்துள்ளது.

நெரிசலான வாகன போக்குவரத்தும், நகரத்திற்கு வெளியே பொருட்களை எரிப்பதும், தொழிற்சாலைகளில் இருந்து வரும் புகைகளுமே இந்த நச்சுத்தன்மைக்கு காரணமாக கூறப்படுகிறது.

இந்த அபாயகரமான நச்சுத்துகள்கள் பிஎம் 2.5 எனும் அளவை கடந்து, தாய்லாந்தை சுற்றியுள்ள 41 பகுதிகளில் நச்சுக்காற்றாக வீசி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் அப்பகுதியில் பாதிப்புக்குள்ளான மக்கள், தங்கள் மூக்குகளில் இருந்து ரத்தம் கசிவதையும், இருமலின்போது ரத்தம் வருவதையும், கண்களின் கருவிழிகளில் ரத்தம் உறைந்து இருப்பதையும் ஒளிப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர்.

இந்த பதிவுகளை வெளியிட்டு, தங்கள் உடல்நலனை பாதுகாக்குமாறும், இதுபோன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளனர். இதனால் மக்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகினர்.

இதனையடுத்து அடுத்த சில வாரங்களுக்கு அங்குள்ள பாடசாலைகளை மூடவும், டீசல் மூலம் இயங்கும் வாகனங்களுக்கு தடை விதிக்கக் கோரியும் நாடு முழுவதும் ஆலைகளை ஆய்வு செய்வதற்கும் உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

ஏர்விஷ்வல்ஸ் நிறுவனம் கடந்த வாரம் நடத்திய ஆய்வில், உலக அளவில் காற்று மாசுபாடு நிறைந்த நாடுகளில் பாங்கொக் 5-வது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #colombo.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.