யெமன் மக்களுக்கு செல்லும் உதவியை பன்னாட்டு சமூகம் உறுதி செய்ய வேண்டும் !!

யெமன் மக்களுக்கு உணவு, குடிநீர், மருந்துகள் கொண்டுசெல்லப்படுவதை பன்னாட்டுச்சமூகம் உறுதிசெய்ய வேண்டும் என, போப்பரசர் பிரான்சிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கத்தோலிக்கக் கிறித்தவ மதத்தலைவரான போப்பரசர் பிரான்சிஸ் முதன்முறையாக இஸ்லாமிய நாடான ஐக்கியஅரபு ராஜ்யத்திற்குச் சென்றுள்ளார்.

குறித்த விஜயத்திற்கு முன்னர் யெமனில் நீடிக்கும் முற்றுகை குறித்து பேசிய போதே பாப்பரசர் பிரான்சிஸ், யேமன் மக்கள் குறித்து கவலை வெளியிட்டுள்ளார்.

இந்த குழந்தைகள் மற்றும் அவர்களின் பெற்றோரின் கூக்குரலானது கடவுளிடம் இருந்து எழுகிறது எனவே அவர்களுக்கு உணவு, குடிநீர், மருந்து ஆகியவை சென்று சேர்வதைப் பன்னாட்டுச்சமூகம் உறுதிசெய்ய வேண்டும் எனப் போப் பிரான்சிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும்குறித்த விஜயத்தில் அவர் உரையாற்றவுள்ள இடங்களில் பலத்த பாதுகாப்புஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #colombo.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.