வீட்டுக்குள் பெரும் கசிப்பு உற்பத்தி!!

பெண் ஒருவரின் தலைமையில் வீட்டுக்குள் இயங்கிய கசிப்பு உற்பத்தி நிலையம் பொலிஸாரால் முற்றுகையிடப்பட்டது.

திம்புள்ள பத்தனை டெவான் பிரதேசத்தில் நேற்றிரவு பொலிஸார் நடத்திய சோதனை நடவடிக்கையில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகையிடப்பட்டது.

பத்தனை நாவலப்பிட்டி பிரதான வீதி ஊடாக கொழும்புக்கு 2300 போத்தல்களில் அடைக்கப்பட்ட கசிப்பு பாரவூர்தியில் கொண்டு செல்லப்பட்டது.

தகவல் அறிந்த போதைபொருள் ஒழிப்பு அதிகாரிகள் குழு கசிப்பு போத்தல்களுடன் சாரதி மற்றும் நடத்துனரையும் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் ஊடாக விசாரணைகளை மேற்கொண்ட அதிகாரிகள், கசிப்பு தயாரிக்கும் இடடான பத்தனை பகுதியை நோக்கி விரைந்தனர்.

அங்கு கசிப்பு நிலையத்தை நடத்தி வந்த பெண் உள்ளிட்ட நால்வர் கைது செய்யப்பட்டனர்.

அங்கிருந்த ஒரு இலட்சத்து 24036 போத்தல்களில் நிரப்பப்பட்ட கசிப்பு. 48 பரல்கள், 10 அடி நீள பிளாஸ்டிக் குழாய், காஸ் சிலின்டர்கள், துருப்பிடித்த தகரம் உள்ளிட்ட பலவற்றைக் கைப்பற்றினர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #colombo.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.