அணுவாயுத திறனை பாதுகாக்க வடகொரியா முயற்சி!!

வடகொரியாவின் அணுசக்தி திட்டங்கள் தொடர்வதாகவும், பொருளாதார தடைகள் பயனற்றவை என்றும் ஐ.நா. சுட்டிக்காட்டியுள்ளது.

ஐ.நா. கண்காணிப்பாளர்களால், 15 உறுப்பினர்களை கொண்ட பாதுகாப்பு சபையின் பொருளாதார தடைக் குழுவிற்கு சமர்ப்பிக்கப்பட்ட இரகசிய அறிக்கையிலேயே இது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அணுசக்தி மற்றும் ஏவுகணை திறன்களை இராணுவத் தாக்குதல்களால் அழிக்க முடியாது என்பதை உறுதிசெய்வதற்கு வடகொரியா பணியாற்றி வருவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதிக்கும், வடகொரிய தலைவருக்கும் இடையிலான இரண்டாவது உச்சிமாநாட்டிற்கான தயார்படுத்தல்கள் இடம்பெற்று வருகின்ற நிலையில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

எனினும், இவ்வறிக்கை குறித்து வடகொரிய தரப்பு இதுவரை பதிலளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #colombo.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.