பெண்ணொருவா் பன்றிகளால் உண்ணப்பட்ட கொடூரம்!

ரஷ்யாவைச் சேர்ந்த பெண்ணொருவர் பன்றிகளை வளர்க்கும் தொழுவத்திற்கு உணவு வைக்க சென்ற நிலையில் அதன் தொட்டிக்குள் வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.

தொட்டிக்குள் தவறுதலாக வீழ்ந்துவிட்ட 56 வயதான பெண்ணை பன்றிகள் சாப்பிட்டு விட்டதாக ரஷ்ய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

உட்மர்ட்டியா என்ற மத்திய ரஷ்யப் பகுதியிலுள்ள ஒரு கிராமத்தில் விலங்குகளுக்கு உணவளிக்க தனது வீட்டை விட்டு வெளியே வந்த விவசாயி பெண்ணுக்கு, வலிப்பு நோய் வந்திருக்கலாம் அல்லது அவர் மயக்கமடைந்து இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

இறந்த பெண்ணின் உடலை அவரது கணவர் பின்னர் கண்டறிந்துள்ளார். அதிகளவிலான இரத்தப் போக்கினால் அவர் இறந்துவிட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

பெண்ணின் கணவருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால், சம்பவம் இடம்பெற்றதற்கு முதல்நாளன்று விரைவில் உறக்கத்திற்குச் சென்றுள்ளார்.

பின்னர் காலையில் விழித்த அவர் தனது மனைவியை வீட்டில் காணாது தேடியுள்ளார். பின்னர் நிலைமையை புரிந்து கொண்ட கணவர் பொலிஸாரிடம் முறையிட்டுள்ளார்.  இதனையடுத்தே சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டதாக ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #colombo

No comments

Powered by Blogger.