லண்டனில் ஈகைப்பேரொளி முருகதாசன் உட்பட்ட 21 தியாகிகள் நினைவுக் கல்லறையில்"ஈகைப்பேரொளி" நிகழ்வுகள்!

தமிழர் என்கின்ற தேசிய இனம் எல்லாவற்றையும் இழந்து தவித்த வேளையில் சர்வதேசத்திடம் தமிழின அழிப்பை தடுத்து நிறுத்தக்கோரி ஐ.நா முன்றலில் 12/02/2009 அன்று தன்னைத் தானே தீயினில் ஆகுதியாக்கிய "ஈகைப்பேரொளி" வர்ணகுலசிங்கம் முருகதாசன் அவர்களின் 10ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு இன்று லண்டனிலுள்ள அவரது நினைவுக்கல்லறையில்(Hendon Cemetery & Crematorium, Holders Hill Road, London, NW7 1NB) காலை 10 மணியிலிருந்து மதியம் 12 மணிவரை  நடைபெற்றது.
அத்துடன் ஈழத்தமிழர்களுக்காக புலம்பெயர் தேசங்களில் தங்களை தீயிலே ஆகுதியாக்கிய 26 ஈகியர்களின் திருவுருவப் படங்கள் வைக்கட்டு மலர் வணக்கம் செலுத்தப்பட்டது.

இன்று காலை 11.00 மணியளவில் பொதுச்சுடர் ஏற்றப்பட்டு அகவணக்கம் செலுத்தப்பட்டு, தொடர்ந்து ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு மலர் மாலை  அணிவிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து மலர் வணக்கமும், நினைவுரைகளும் இடம்பெற்றது. இந்நிகழ்வில் "ஈகைப்பேரொளி" முருகதாசனின் பெற்றோர், உறவினர்கள் மற்றும் தேசப்பற்றாளர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.


No comments

Powered by Blogger.