முல்லைத்தீவு தண்ணீரூற்று பிரதேசத்தில் சித்த மருத்துவ சிகிச்சை நிலையம்!

சிவன் அறக்கட்டளையின் விசேட தேவைக்குட்பட்டவர்களுக்கான சித்த மருத்துவ சிகிச்சை நிலையத்தின் இன்னோர் கிளை முல்லைத்தீவு தண்ணீரூற்று பிரதேசத்தில் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.


ஆயள்வேத மருத்துவர் Dr.சோபிதா ஆயுள்வேத சமூக மருத்துவ உத்தியோகத்தர் Dr.றஸ்லினா முல்லைத்தீவு மாஞ்சோலை வைத்தியசாலை Nursing Mestre   திரு. பாலநாதன் முன்னாள் Nursing Mestre திருமதி.கமலினி சிவன் அறக்கட்டளை இணைப்பாளர் க.சதீஸ் மற்றும் பலர் கலந்து கொண்டு சிகிச்சை நிலையத்தினை ஆரம்பித்து வைத்துள்ளனர்.

முல்லைத்தீவு பிரதேசத்திலுள்ள விசேடதேவைக்குட்பட்ட சிறுவர்களை வைத்தியர்கள் பார்வையிட்டு அவர்களுக்கு வழங்க வேண்டிய சிகிச்சைகள் தொடர்பில் எடுத்துரைக்கப்பட்டது. தொடர்ந்து அவர்களுக்கு எண்ணெய் மசாஜ் செய்யப்பட்டு வருகிறது. வாரத்தில் இரு நாட்கள் வைத்தியர்கள் அவர்களை பார்வையிட்டு ஆலோசனைகளையும் வழங்க உள்ளனர்.

குறித்த பிரதேச மக்கள் இதுவரை இவ்வாறான ஒரு சிகிச்சை முறை தமக்கு கிடைக்கவில்லை எனவும் தற்பொழுது சிவன் அறக்கட்டளை சிகிச்சை நிலையம் மூலம் தமது பிள்ளைகள் பலனடைவதற்குரிய வாய்ப்பு கிடைத்துள்ளதை எண்ணி மகிழ்வடைவதாகவும் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.