பழைமையான தென்னிந்திய யானை முகாம்!

இயற்கை வனப்பு மிக்க பிரதேசங்களைப் போன்றே விலங்குகளின் வதிவிடங்களும் சுற்றுலாத்துறையை வலுப் பெறச் செய்கின்றன.
அந்த வகையில் ஆசிய யானைகளில் இந்திய யானைகளுக்கு மிக முக்கியமான பங்குண்டு.

தென்னிந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில் உள்ள யானைகள் காப்பகத்தில் பாதுகாக்கப்பட்டு வரும் காட்டுயானைகள் இயற்கை இடர்களில் இருந்து காப்பாற்றப்பட்டு, மனிதர்களுடன் அணுகுவதற்கு பழக்கப்படுத்தப்பட்டு வருகின்றன.

அத்துடன் அங்கு வரும் சுற்றுலாப் பயணிகளை இந்த யானைகள் பெரிதும் கவர்ந்துள்ளன.  1965 ஆம் ஆண்டளவில் ஸ்தாபிக்கப்பட்ட சக்ரபாலியு யானைகள் காப்பகத்தில் 26 வளர்ந்த யானைகளும், 4 குட்டிகளும் வசிக்கின்றன.

இந்த முகாம் முக்கியமாக கிராம மக்களை தாக்கும் காட்டு யானைகளை பாதுகாப்பாக மீட்டு வருவதற்கும், ஷிமோகா நகரைச் சுற்றியுள்ள பயிர்களை அழிக்கும் யானைகளை அப்புறப்படுத்துவதற்கும் தனது பங்களிப்பை செலுத்தி வருகின்றது.

இதன்படி, பழக்கப்பட்ட யானைகள் அருகில் உள்ள தங் ஆற்றில் விளையாடுவதற்கும், குளிப்பதற்கும் அனுமதிக்கப்படுகின்றன.

காட்டு விலங்குகளுக்கு மனிதனால் ஏற்படும் அபாயங்களை குறைப்பதற்கும், அரிய விலங்குகளை பாதுகாப்பதற்கும் இவ்வாறான காப்பகங்கள் முக்கிய சேவையை வழங்கி வருகின்றன.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

No comments

Powered by Blogger.