நாடாளுமன்ற மின்தூக்கிகள் தொடர்பான தரமதிப்பீட்டு அறிக்கை சபாநாயகரிடம்!!

நாடாளுமன்ற மின்தூக்கிகள் தொடர்பான தரமதிப்பீட்டு அறிக்கை சபாநாயகர் கருஜயசூரியவிடம் கையளிக்கப்படவுள்ளது.


மின்தூக்கியை செயற்படுத்திய நிறுவனத்தினால் இந்த அறிக்கை சபாநாயகரிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இந்த விடயம் தொடர்பாக கடந்த சில நாட்களாக ஆய்வுகளை முன்னெடுத்த குறித்த நிறுவனத்தின் அதிகாரிகள், இது குறித்த அறிக்கையை கையளிக்கவுள்ளதாக நாடாளுமன்ற படைக்கள சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியினுள் 10 மின்தூக்கிகள் செயற்பாட்டில் உள்ளதுடன் அவற்றில் இரண்டு, நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாவனைக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

கடந்த 7ஆம் திகதி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பயன்படுத்தும் மின்தூக்கி செயலிழந்தமையால், உறுப்பினர்கள் சிலர் சுமார் 20 நிமிடங்கள் மின்தூக்கிக்குள் அகப்பட்டிருந்தனர்.

இதனையடுத்து மின்தூக்கி செயலிழந்தமைக்கான காரணத்தை, மின்தூக்கியை நிர்வகிக்கும் நிறுவனம் சமர்ப்பிக்க வேண்டும் என சபாநாயகர் கரு ஜயசூரிய கோரியிருந்தார்.

மேலும், பாதுகாப்பு நோக்கத்தை கருத்திற்கொண்டு 6 பேர் மாத்திரம் மின்தூக்கியில் பயணிக்கும் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இதற்காக மின்தூக்கி செயற்பாட்டாளர் ஒருவரும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

No comments

Powered by Blogger.