மகுடம் சூடியது கிங்!!

நியுயோக்கின் வெஸ்ட்மின்ஸ்டர் கெனல் கிளப்பில் இடம்பெற்ற விசித்திரமான நாய்களுக்கான “Best in Show” போட்டியில் கிங் என்ற வயர் பொக்ஸ் டெரியர் வகையைச் சேர்ந்த நாய் ஒன்று மகுடம் சூடியுள்ளது.

நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற குறித்த போட்டியில் ஆச்சரியமிக்க வகையில் சுமார் 3000 நாய் இனங்கள் பங்கேற்றிருந்தன. விசித்திரமான, உயர்ந்த இனங்களைச் சேர்ந்த மற்றும் சிறந்த பழக்க வழக்கங்களை உடைய நாய்கள் இந்த போட்டியில் கலந்து கொண்டன.

மட்டிசன் ஸ்கொயர் கார்டினில் கடந்த இரண்டு நாட்களாக இடம்பெற்ற போட்டியில் அமெரிக்காவின் 50 மாநிலங்கள் மற்றும் 14 பிற நாடுகளில் இருந்தும் போட்டிக்கான நாய்கள் தமது எஜமானர்களுடன் வந்திருந்தன.

203 இனங்களைச் சேர்ந்த 2,800 நாய்கள் காட்சிக்காக தெரிவு செய்யப்பட்டு அவற்றின் சிறப்புத் திறமைகள் ஆராயப்பட்டன. அதில் 7 வயதான கலிபோர்னியாவைச் சேர்ந்த ‘கிங்’ என்ற நாய் அதன் பெயருக் கேற்றாற் போல் மகுடம் சூடிக் கொண்டதுடன், அதிகளவான பரிசுப் பொருட்களையும் பெற்றுக் கொண்டது.

தனது எஜமானரான கெப்ரியல் ரன்கெல்லுடன் கௌரவமிக்க பட்டத்தை வென்ற 15 வது வயர் பொக்ஸ் டெரியர் வகையான நாய் இதுவாகும், அத்துடன் கிங், மூன்றாவது முறையாக ‘Best in Show’ பட்டத்தை வெற்றிகொண்டுள்ளது.

வெஸ்ட்மின்ஸ்டர் கெனல் கிளப்பின் 143 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு அமெரிக்காவின் இரண்டாவது மிக பழைமை வாய்ந்த விலங்குகளுக்கான போட்டி நிகழ்வாக இந்த விசித்திர நாய்கள் கண்காட்சி நடைபெறுகிறது.

அமெரிக்காவின் முதலாவது பழைமையான விலங்கு கண்காட்சியாக கென்டகி டேர்பி குதிரைப் பந்தயமே இடம்பிடித்துள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

No comments

Powered by Blogger.