மூச்சுக்காற்றே நூலாய் என்னிடம்..!

சம்மதம் சொல்லியே தந்துவிடு
உள்ளமதை
இங்கிதமாய் விடியட்டும்
என் மனவானம்
சந்தணமே உன் சந்நிதி
தேடி தவமாய் தவமிருக்கும்
முனிவனடி

தமிழை தள்ளிவைக்கா
கவரிமானாய்
மெல்லினமாகி நெற்றித்திலகமிட்டு
மெல்லெனப்பேசி
என் விழித்திரையில் சிறையுண்டு
போகையில் சிதறுண்டு
போவேனடி

பூந்தோட்ட மலராய்
நீ வேண்டும் அந்த
மகரந்த நறுமணத்தில்
நான் திளைத்து
அழகான சிலையாய்
ஆயுளை செதுக்கவேண்டும்

வல்லினமும் மெல்லினமுமாய்
வாழ்வில் ஒன்றாகி
இன எழுத்தாகி தமிழ்
விருத்தி செய்யவேண்டும்

நீண்டு விரியும் நடுநிசியில்
என்னவளே உன்
நினைவுப்பால் குடித்து
தவண்டு புரண்டு குழந்தையாய்
விழி பிதுங்கி தேடுகிறேன்
விடியலை காணவில்லை

விடியலே நீதானென
முடிவு செய்து விட்டேன்
இப்போது உன்
மூச்சுக்காற்றே நூலாய்
என்னிடம்.

-தூயவன்-

No comments

Powered by Blogger.