காதல் என்றாலே என்னவென்று புரியாமல்...?

காதலர் தினத்தன்று
ஆர்வ கோளாறில்
வானொலியில் வரும் கவி
வரியை காதலிக்கு அனுப்பி  விட்டு
திட்டு வாங்கும் காதலர்களுக்கும்

எனக்காக ஒரு பொம்மைக்குட்டியாவது
கிடைக்குமென்று கனவுகண்டு
காதலனின் வரவை எதிர்பார்த்து
காத்திருக்கும் காதலிகளுக்கும்

எப்படித்தான் காசை ஒழித்து
வைத்தாலும்  அப்பாவின்
சட்டைப்பையில் இருந்து
ஆட்டையை போட்டு கொண்டு
சென்று கதை கதையாக
பெருமைபேசும்
இளம் காளைகளுக்கும்
கன்னிகளுக்கும்

மொக்கை பிகரையும்
மோனலிஸா ஓவியம்
போல எண்ணி கவி புனையும்
காதல் கவிஞர்களுக்கும்
எதுவுமே இல்லாத வெட்டி
காதலனை ஆர்யாரேஞ்சில்
நினைத்து கவியெழுதும்
பெண் கவிஞர்களுக்கும்

மீசை நரைத்தாலும்
ஆசை நரைக்காமல்
அம்மாவின் கடைக்கண்
பார்வையில்
மதிமயங்கும் அப்பாகளுக்கும்
அந்தக்கால கமலை போல
ஆணழகன் என் கணவனென்று
வாய்கூசாமல் பொய் புனையும்
அம்மாக்களுக்கும்

காதல் என்றாலே என்னவென்று
புரியாமல் புலம்பும்
நிலாவின் இனிமையான
காதலர்தின வாழ்த்துக்கள் ....

நிலானி
14/02/2019
00.01
லண்டன்

No comments

Powered by Blogger.